அக்‌ஷரா ஹாசன் அந்தரங்க புகைப்படங்கள் லீக்… மும்பை காவல் நிலையத்தில் புகார்

அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோாி நடிகை அக்‌ஷரா ஹாசன் மும்பை காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். நடிகர் கமல் ஹாசன் இளைய மகளான அக்‌ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் மர்ம நபரால் சமீபத்தில் லீக் செய்யப்பட்டது. இதனால் அக்‌ஷரா மட்டுமின்றி பலரும்…

By: Updated: November 8, 2018, 09:03:04 AM

அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோாி நடிகை அக்‌ஷரா ஹாசன் மும்பை காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

நடிகர் கமல் ஹாசன் இளைய மகளான அக்‌ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் மர்ம நபரால் சமீபத்தில் லீக் செய்யப்பட்டது. இதனால் அக்‌ஷரா மட்டுமின்றி பலரும் அதிர்ச்சியடைந்தனர். அண்மையில் வெளியான இந்த புகைப்படங்கள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அக்‌ஷரா ஹாசன் விளக்கம் மற்றும் புகார்

இதனை தொடர்ந்து அக்‌ஷரா, இணையத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் படத்தின் சூட்டிங்கின் போது எடுக்கப்பட்டவை என்றும், துரதிருஷ்ட விதமாக இணையத்தில் வெளியாகி உள்ளதாக அவா் விளக்கம் அளித்திருந்தாா். மேலும் இவை அனைத்தும் ஒரு படப்பின் தவறான டேக்குகளின் போது எடுக்கப்பட்டவை என்றும், மீண்டும் இது போன்ற படங்கள் எடுக்கும் வாய்ப்பு நேர்ந்தால், அதை எடுக்க கட்டாயம் தயங்க மாட்டேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், இந்த அந்தரங்க புகைப்படங்களை யார் வெளியிட்டிருப்பார் என்பதை கண்டறியவும், இந்த குற்றச்சாட்டின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், அக்‌ஷரா மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Akshara haasan files complaint in mumbai police station regarding private photos leak

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X