தமிழ் சினிமாவின் உலக நாயகனான கமலின், இளைய மகளான அக்ஷரா ஹாசன் விரைவில் வெப் சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் மற்றும் கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் அமிதாப் பச்சன் மற்றும் தல அஜித்துடன் நடித்து விட்டு சத்தமே இல்லாமல் மும்பை பக்கம் தரையிறங்கியுள்ள அக்ஷரா கூடிய விரைவில் சீரியலில் நடிக்கவுள்ளார். தமிழில் வெளியான விவேகம் படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், அக்ஷராவின் கேரக்டர் பலரின் பாராட்டுக்களையும் பெற்றது.
அதன் பின்பு, அவரின் அடுத்த படம் என்ன? என்பது குறித்து அறிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். இந்நிலையில், தான் அக்ஷரா வெப் சீரியலில் நடிக்க முடிவு எடுத்துள்ளார். பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான ‘ஆஸ் ஐயாம் சஃபரிங் ப்ரம் காதல்’ வெப் சீரியலுக்கு, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வெளிநாடுகளைப் போல் இந்தியாவிலும் வெப் சீரியல் கலாச்சாரம் மேலூங்க ஆரம்பித்துள்ளது.
இயக்குநர் கௌதம் மேனன் மற்றும் நடிகர் தனுஷ் போன்றோரும் வெப் சீரியல் தயாரித்து வருகின்றனர். இந்நிலையில் தான், நடிகை அக்ஷராஹாசன் , “சீஜா ஜோஸ் இயக்கிய நாவலான ”குட் பாய் கேர்ள்” (Sheeja Jose’s Good bye Girl) என்ற கதாபாத்திரத்தின் வெப் சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெப் சீரியலுக்கு சென்சார் இல்லாததால், ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகள் வெளிப்படையாக இந்த சீரியலில் பயன்படுத்தப்படுவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது. இதுக் குறித்து அக்ஷராவிடம் கேட்டால், “ அதைப்பற்றி எல்லாம் எனக்கு தெரியாது. கதை பிடித்திருந்தது. கதாபாத்திரம் பிடித்திருந்தது. பிறகு என்ன நடிக்க சம்மதித்தேன். சின்னத்திரை, பெரியத்திரை எதுவாக இருந்தாலும் கதையின் கரு தான் முக்கியம்.
இந்த சீரியலில் எனக்கு ஆக்ஷன் ரோல். அதிகமான சண்டைக்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
அதனாலேயே இப்போது ஜிம்மிற்கு சென்று பயிற்சி பெற்று வருகிறேன்.பாலிவுட், கோலிவுட் இரண்டிலும் நடித்ததில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். அதே சமயம், பெரிய திரையை போன்று சின்னத்திரையிலும் நடிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. இந்த கதாப்பாத்திரம் என்னை ரொம்ப இம்ப்ரஸ் செய்தது. அதனால் தான் சற்றும் யோசிக்காமல் முடிவு செய்தேன்” என்று தெளிவாக கூறி முடித்தார்.
சமீபத்தில், நடிகர் கமலுடன், அக்ஷரா ஜிம்மில் ஓர்க் அவுட் செய்வது போல் ஒருபுகைப்படம் வெளியானது. அதைப் பற்றிக் கேட்டால் சிரித்துக் கொண்டே ‘அது ஜஸ்ட் ஃபன்னி போஸ் யா” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.