ஒரிஜினல் காஞ்சனாவே பரவாயில்லை: லக்ஷ்மி பாம் மீது கடுப்பில் ரசிகர்கள்

தனது 30 வருட சினிமா வாழ்கையில் மிகவும் நுணுக்கமான  கதாப்பாத்திரம் இதுதான் என்றும் அக்ஷய் குமார் தெரிவித்தார்.

By: Updated: October 11, 2020, 08:42:09 PM

2011 ஆம் ஆண்டு வெளிவந்த காஞ்சனா தமிழ்த் திரைப்படத்தை  இந்தியில்  ‘லக்ஷ்மி பாம்’  என்ற பெயரில் உருவாகியுள்ளது. ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் , பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ஹீரோவாக நடித்துள்ளார்.

நவம்பர் 9ம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் இத்திரைப்படம்   வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகியது.

 

லக்ஷ்மி பாம் மெய்நிகர்  ட்ரைலர் வெளியீடு நிகழ்ச்சியில் பேசிய அக்‌ஷய் குமார்,“திகில் கலந்த நகைச்சுவை படம் எனக்கு மிகவும்  பிடித்தது. தமிழில் வெளிவந்த காஞ்சனா படத்தைப் பற்றி நான் பல ஆண்டுகளுக்கு முன்பு கேள்விப்பட்டேன். மிகவும் பிடித்து விட்டது. ஆனால், பல காரணங்களால் படம் தாமதமாகியது” என்று தெரிவித்தார்.

தனது 30 வருட சினிமா வாழ்கையில் மிகவும் நுணுக்கமான  கதாப்பாத்திரம் இதுதான் என்றும் அக்‌ஷய் குமார் தெரிவித்தார்.

இருப்பினும், சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை வழக்கில் அக்ஷய் குமார் வெளிப்படையாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். இருப்பினும், ட்ரைலர் வெளியிடுவதற்கு மூன்று நாள் முன்னதாக  சுஷாந்த் சிங் ராஜ்புட் குறித்தும், பாலிவுட்டில் நிலவும் போதைப் பொருள் பிரச்சனை குறித்தும் அக்‌ஷய் குமார் விடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

 


இந்த போக்கு,  சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை எற்பத்தியது.  இதனால், அவரின் பல்லாயிரக்கான ரசிகர்கள்  அவரின் திரைப்படத்தை புறக்கணிப்பதாக ட்விட்டரில் தெரிவித்து வந்தனர். அதில் சிலர், ஒரிஜினல் காஞ்சனாவே பரவாயில்லை. இந்தியில் படம் மோசமாக உள்ளது என்பது போல் கருத்தை பதிவு செய்தனர்.

 

 

 


2011 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த காஞ்சனா திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ், சரத்குமார், லக்ஷ்மி ராய், கோவை சரளா,தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு சில ஆண்டுகளுக்கு முன் வந்த முனி திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இது விளம்பரப்படுத்தப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Akshay kumar laxmmi bomb trailer sushant singh rajput boycottlaxmmibomb hashtag

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X