மனைவி ட்விங்கிள் கண்ணாவுக்கு அக்‌ஷய் குமார் கொடுத்த அரிய பரிசு

அந்த நிகழ்ச்சியின் போது தான் கரீனாவுக்கு ஒரு ஜோடி வெங்காய காதணிகள்  காட்டப்பட்டன.

By: Updated: December 13, 2019, 08:01:49 PM

Akshay Kumar’s Gift : நடிகரும் எழுத்தாளருமான ட்விங்கிள் கண்ணா, தனது கணவரும், நடிகருமான அக்‌ஷய் குமாரிடமிருந்து ஒரு அரிய பரிசைப் பெற்றுள்ளார். என்னவென்று கேட்கிறீர்களா. ஒரு ஜோடி வெங்காய காதணிகளை தன் மனைவி ட்விங்கிளுக்கு பரிசளித்திருக்கிறார் அக்‌ஷய். காதணிகளின் படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த ட்விங்கிள் அதன் பின்னணி கதையையும் விளக்கியுள்ளார்.

”எனது பார்ட்னர், கபில் சர்மா நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பி வந்ததும், ‘அவர்கள் இதை கரீனாவிடம் காண்பித்தார்கள், அவர் இதில் இம்ப்ரெஸ் ஆனதாக தெரியவில்லை. ஆனால் நீ இவற்றை என்ஜாய் செய்வாய் என்று எனக்குத் தெரியும், அதனால் நான் உனக்காக இதை வாங்கி வந்தேன்’ என்றார். சில நேரங்களில் மிகச் சிறிய விஷயங்கள், உங்கள் இதயத்தைத் தொடக்கூடிய விஷயங்களாக மாறிவிடும்” என்று இன்ஸ்டாகிராமில், வெங்காய காதணிக்கான காரணத்தைக் குறிப்பிட்டிருந்தார் ட்விங்கிள்.

அக்‌ஷய் மற்றும் கரீனா கபூர் தாங்கள் நடித்திருக்கும் ‘குட் நியூஸ்’ படத்தைப் புரொமோட் செய்ய ’த கபில் சர்மா’ ஷோவில் கலந்துக் கொண்டனர்.  அந்த நிகழ்ச்சியின் போது தான் கரீனாவுக்கு ஒரு ஜோடி வெங்காய காதணிகள்  காட்டப்பட்டன. பாலிவுட் திவா இதில் இம்ப்ரெஸ் ஆகவில்லை எனத் தெரிகிறது. இருப்பினும், அக்‌ஷய் தனது மனைவிக்காக அதனை வாங்கி வந்தார். வெங்காய காதணிகள் ஏன்? தற்போது வெங்காய விலை உயர்ந்துள்ளதால், டிக்டாக் வீடியோக்கள் முதல், திருமண பரிசு வரை வெங்காயம் தான் ட்ரெண்டிங்கில் உள்ளது.

குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக, முதன்முறையாக திருச்சியில் ஒருவர் கைது…

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Akshay kumar present onion earing twinkle khanna

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X