/tamil-ie/media/media_files/uploads/2018/04/a962.jpg)
ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள 'கரு' படத்தின் டைட்டில் 'தியா' என மாற்றப்பட்டுள்ளது.
மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' படத்தின் மூலமாக தமிழகத்தில் பிரபலமான நடிகை சாய் பல்லவி, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கரு' எனும் படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுதான். தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இதற்கிடையில் இந்தப் படத்தின் பெயர் `கரு' எனக்கு சொந்தமானது என்று ஜெ.எஸ்.ஸ்கிரீன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர் மணிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஏற்கெனவே இந்தப் படத்தின் பெயர் `கரு'வை 2013-ம் ஆண்டே தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்தேன். ஆனால், தற்போது லைகா நிறுவனம் இந்தப் பெயரை கொண்ட படத்தைத் தயாரித்து வருகிறது என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது 'கரு' என்ற பெயரை 'தியா' என மாற்றியிருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் பெயர் படத்தில் வரும் முக்கியமான கேரக்டர் பெயராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம் சி.எஸ், இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.
. @Sai_Pallavi92 - Dir #Vijay 's #Karu title changed to #Diya
Here is the FL with #Diya as the title..
Movie releasing on Apr 27th.. @LycaProductionspic.twitter.com/2oea1iVn5s
— Ramesh Bala (@rameshlaus) April 21, 2018
ஏப்ரல் 27ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் ரிலீசாகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.