ஆசியாவின் கவர்ச்சியான பெண்: முதலிடத்தில் ஆலியா, 10-ம் இடத்தில் பிரியங்கா சோப்ரா

2018 பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் படுகோன், 2019-ம் ஆண்டில் இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளார்

2018 பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் படுகோன், 2019-ம் ஆண்டில் இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Asian sexiest female alia bhatt

Asian sexiest female alia bhatt

Alia Bhatt - Deepika Padukone: பாலிவுட் நட்சத்திரம் ஆலியா பட் 2019-ம் ஆண்டின் கவர்ச்சியான ஆசிய பெண் என்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாலிவுட்டின் மற்றொரு முன்னணி நட்சத்திரமான தீபிகா படுகோனே, பத்தாண்டுகளுக்கும் மேலாக திகழ்ந்துக் கொண்டிருக்கும் கவர்ச்சிப் பெண் என ஆன்லைன் கருத்துக் கணிப்பின் முடிவுகள் புதன் கிழமை லண்டனில் வெளியானது.

Advertisment

இங்கிலாந்தை அடிப்படையாகக் கொண்ட ’ஈஸ்டர்ன் ஐ’ வெளியிட்டுள்ள வருடாந்திர பட்டியல், இது ஆலியா பட்டிற்கான கனவு ஆண்டு என்பதை குறிக்கிறது. காரணம் ஒருபுறம் நடிப்புக்கான விருதுகள் மறுபுறம் ஆஸ்கரில் நுழைந்த ’கல்லி பாய்’ படத்தில் நடித்தது, என ஆலியாவுக்கு இந்தாண்டு சந்தோஷம் மேல் சந்தோஷம்.

வாக்குகளால் மகிழ்ச்சி அடைந்த ஆலியா, “உண்மையான அழகு வெளியில் நாம் காண்பதைத் தாண்டியது என்று நான் எப்போதும் நம்புகிறேன். அதுதான் உண்மையில் கணக்கிடப்படுகிறது. நமக்கு வயதாகும், நம் தோற்றங்கள் மாறும், ஆனால் ஒரு நல்ல இதயம் எப்போதும் நம்மை அழகாக வைத்திருக்கும், அதில் தான் நாம் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

”ஆலியா தடுத்து நிறுத்த முடியாத நட்சத்திரம். அடுத்த 10 ஆண்டுகளில் வணிக ரீதியான இந்தி சினிமாவின் ராணியாக அவர் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க முடியாது. ஒரு திரைப்பட நட்சத்திரத்தை விட அவர் பெண் சக்தியின், சக்தி வாய்ந்த சின்னமாக இருக்கிறார்” என ’ஈஸ்டர்ன் ஐ’ எண்டெர்டெயின்மெண்டின் நிறுவனரும், ஆசிரியருமான அஸ்ஜத் நஸிர் கூறினார்.

Advertisment
Advertisements

2018 பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் படுகோன், 2019-ம் ஆண்டில் இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளார். ஆனால் பத்தாண்டுகள் கணக்கெடுப்பில் அவரது கிரீடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

அதிக ரசிகர்களைக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி நட்சத்திரம் ஹினா கான் 2019 பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். நான்காவது இடத்தில் உள்ள மஹிரா கான் தொடர்ச்சியாக, ஐந்தாவது ஆண்டாக இந்த கிரகத்தின் மிகவும் கவர்ச்சியான பாகிஸ்தானிய பெண் என்ற பட்டத்தை தக்க வைத்திருக்கிறார். மேலும் தசாப்தத்தின் கவர்ச்சியான பாகிஸ்தானி பெண்ணாகவும் குறிப்பிடப்படுகிறார்.

2019 ஆம் ஆண்டிற்கான முதல் 10 இடங்களில் சுர்பி சந்த்னா 5-ம் இடத்திலும், கத்ரீனா கைஃப் 6-ம் இடத்திலும், சிவாங்கி ஜோஷி 7-வது இடத்திலும், 8-ம் இடத்தில் நியா சர்மா, மெஹ்விஷ் ஹயாத்துக்கு 9-வது இடமும், பிரியங்கா சோப்ராவுக்கு 10-ம் இடமும் கிடைத்துள்ளது. 46 வயதான ஐஸ்வர்யா ராய்க்கு இதில் 39-வது இடம் கிடைத்துள்ளது.

Deepika Padukone Bollywood Priyanka Chopra

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: