ஆல்யா பர்த்டேக்கு சர்ப்பரைஸா தாலி கட்டினேன்… ட்ரெண்டிங்கில் சஞ்சீவ் வீடியோ..

alia manasa sanjeev marriage: ஆல்யா பர்த்டே அன்று சர்ப்பரைஸாக ஈசிஆரில் உள்ள கோவிலுக்கு அழைத்து போய் தாலி கட்டியுள்ளார் சஞ்சீவ்.

aliya manasa, sanjeev

விஜய்டிவியின் ராஜா ராணி தொடரில் கார்த்தி -செம்பா கேரக்டரில் நடித்து பிரபலமானவர்கள் சஞ்சீவ் – ஆல்யா மானசா. இந்த சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும்போதே இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் சீரியல் முடிவதற்கு சில மாதங்களுக்கு முன் திடீரென திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. ஆனால் அதையும் தாண்டி அந்த தம்பதி மனவாழ்வில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். தற்போது இவர்களுக்கு ஒரு வயதில் அய்லா என்ற மகள் உள்ளார்.

ஆல்யா மனசா தற்போது ராஜா ராணி2 வில் நடித்து வருகிறார். இந்த ஜோடி யூடியூப் சேனல் ஒன்றை கடந்த மார்ச் மாதம் தொடங்கினர். லாக்டவுனில் ஷூட்டிங் இல்லாத ப்ரீ டைமிங்கில் வீடியோக்களை பதிவிட்டு வந்தனர். அவ்வபோது பர்த்டே சர்ப்ரைஸ் வீடியோ, ட்ராவல் vlog என பதிவிட்டு வருகின்றனர்.

Raja Rani Alya Manasa Sanjiev Youtube Channel Trending Videos

தற்போது லேட்டஸ்ட்டாக நம்ம வீட்டு கல்யாணம் என்ற பெயரில் வீடியோ பதிவிட்டுள்ளார்.அதில் தங்களது த்ரில்லான மேரேஜ் எப்படி நடந்தது என கூறியுள்ளனர். ஆல்யா பர்த்டே அன்று சர்ப்பரைஸாக ஈசிஆர் உள்ள கோவிலுக்கு அழைத்து போய் தாலி கட்டியுள்ளார் சஞ்சீவ். இந்த வீடியோவில் இதை அவரே கூறியுள்ளார். ராஜா ராணி தொடர் 530 எபிசோடை கடந்து முடியபோகிறது என தெரிந்தவுடன் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளது இந்த ஜோடி. திருமணம் செய்துகொண்ட பிறகு ஆல்யா வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். பின்னர் சஞ்சீவ் வீட்டில் சிம்பிள் மேரேஜ்.

பின்னர் கிராண்ட்டாக ரிசப்ஷன் என கலக்கியுள்ளனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தியுள்ளனர். ரிசப்ஷன் வீடியோவையும் பதிவிட்டுள்ளது இந்த ஜோடி. இந்த வீடியோ தற்போது யூடியூப்பில் ட்ரெண்டிங்கில் உள்ளது. ஆல்யா-சஞ்சீவ் ஜோடியை வாழ்த்தியுள்ள ரசிகர்கள், லைப் லாங் இப்பேடியே இருங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Aliya manasa sanjeev nama vetu kalyanam marriage video trending

Next Story
கண்ணம்மா, பாக்யாவுக்கு டாப் 5-ல் இடமில்லை: அடிச்சுத் தூக்கும் சன் டிவி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com