நடிகையால் வந்த பஞ்சாயத்து... உறவில் ஏற்பட்ட விரிசல்; 18 ஆண்டாக பேசிக் கொள்ளாத இந்த நடிகர்கள்!

ஒரு நடிகையால் பிரிந்து உறவுக்குள்ளேயே பேசாமல் இருக்கும் இரண்டு நடிகர்கள் யார் என்று பார்ப்போம். இவர்கள் இருவரும் உறவினர்கள் என்பதே நம்மில் பலருக்கும் தெரியாது.

ஒரு நடிகையால் பிரிந்து உறவுக்குள்ளேயே பேசாமல் இருக்கும் இரண்டு நடிகர்கள் யார் என்று பார்ப்போம். இவர்கள் இருவரும் உறவினர்கள் என்பதே நம்மில் பலருக்கும் தெரியாது.

author-image
WebDesk
New Update
allu arjun

தென்னிந்திய திரையுலகில் இன்று பிரமாண்ட வெற்றிகளைக் குவித்து வரும் நடிகர்கள் அல்லு அர்ஜுன் மற்றும் ராம் சரண். 'புஷ்பா' மற்றும் 'ஆர்ஆர்ஆர்' போன்ற படங்களின் மூலம் தேசிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்த இந்த இருவரும் நெருங்கிய உறவினர்கள் என்பது நம்மில் பலருக்கு தெரியாத ஒன்று. அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த், நடிகர் சிரஞ்சீவியின் மச்சான். அந்த வகையில், அல்லு அர்ஜுன் மற்றும் ராம் சரண் இருவரும் உறவினர் ஆவர்.  

Advertisment

இருப்பினும், இவர்களுக்கு இடையே சுமூகமான உறவு இல்லை என்று நீண்ட காலமாகவே செய்திகள் வெளியாகி வருகின்றன. இவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து சில தகவல்கள் பரபரப்பாகப் பேசப்படுகின்றன.

பல வருடங்களுக்கு முன்பு, நடிகர் அல்லு அர்ஜுன் நடிகை நேஹா ஷர்மாவை விரும்பியதாகவும், அவரைத் திருமணம் செய்துகொள்ள நினைத்ததாகவும் கூறப்படுகிறது. பாலிவுட்டில் 'க்ரூக்' படம் மூலம் அறிமுகமான நேஹா ஷர்மா, அதற்கு முன்பே தெலுங்கு படங்களில் நடித்தவர். அப்போதுதான் அல்லு அர்ஜுன் மற்றும் நேஹா ஷர்மா இடையே நெருக்கம் அதிகரித்ததாகத் தெரிகிறது.

allu t (13)

Advertisment
Advertisements

ஆனால், இவர்களின் காதல் முக்கோணக் கதையாக மாறியது. 2007-ஆம் ஆண்டு வெளியான 'சிறுதா' படத்தில் ராம் சரண் மற்றும் நேஹா ஷர்மா இருவரும் அறிமுகமானார்கள். அப்போது, ராம் சரண் மற்றும் நேஹா ஷர்மா காதலிப்பதாக வதந்திகள் பரவின. இது அல்லு அர்ஜுனுக்கு மிகுந்த மனக்கசப்பை ஏற்படுத்தியதோடு, அவரது மனதை வெகுவாகப் பாதித்ததாகவும் கூறப்படுகிறது.

தன் காதலி எனக் கருதியவர், ராம் சரணுடன் உறவில் இருப்பது அல்லு அர்ஜுனுக்குப் பெரும் துயரத்தை ஏற்படுத்தியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது மட்டுமல்லாமல், இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டு தேனிலவுக்குச் சென்றதாகவும் வதந்தி பரவின..இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தபோது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அன்று முதல் அவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த 18 வருடங்களாக இவர்களுக்குள் பேச்சுவார்த்தை இல்லை என்று சில ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

இப்படியான வதந்திகள் பரவியபோது, நடிகர் ராம் சரண் இது குறித்து ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெளிவுபடுத்தினார். நேஹா சர்மாவுடனான தனது திருமணச் செய்தியை ராம் சரண் மறுத்தார். நேஹா ஷர்மாவையும் தன்னையும் இணைத்து வரும் செய்திகள் பொய்யானவை என்று கூறினார். இப்படியான செய்தி தனது மனைவி உபாசனாவுடன் விரிசலை ஏற்படுத்தும் என்றும் கூறியிருந்தார். 

பொது நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாகக் காணப்பட்டாலும், அவர்களுக்குள் இருந்த கசப்புணர்வு இன்னும் தீர்க்கப்படவில்லை என்றும், இவர்களுக்கு இடையே இருந்த மனக்கசப்பு இன்னும் நீடித்து வருவதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன. இதற்கிடையில், அல்லு அர்ஜுன் 2011-ஆம் ஆண்டு ஸ்னேகா ரெட்டியைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராம் சரண் 2012-ஆம் ஆண்டு உபாசனா காமினேனியைத் திருமணம் செய்துகொண்டார். 

allu t (10)

அல்லு அர்ஜூன் -  ராம் சரணுக்கு இடையிலான விரிசலுக்கு நேஹா சர்மா தான் காரணம் என்பதற்கு எந்த ஆதாரமும் இதுவரை இல்லை. அதே நேரம் அல்லு அர்ஜுன் - ராம் சரண் இருவரும் பேசிக்கொள்ளாமல் இருப்பதற்கான காரணம் குறித்தும் வெளிப்படையாக தெரியவில்லை.

Cinema Update Allu Arjun

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: