நயன்தாரா ஸ்டைலில் டாட்டூவை மாற்றிய ஆல்யா மானசா

கையில் பச்சைக் குத்தியிருந்த முன்னாள் காதலரின் பெயரை வேறுவிதமாக மாற்றியிருக்கிறார் ஆல்யா

Alya Manasa, raja rani
Alya Manasa

Alya Manasa: விஜய் டிவி-யில் ஒளிபரப்பான சீரியல்களில் முக்கியமானது ‘ராஜா ராணி’. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த அத்தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த சீரியலில் செம்பா கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் வென்றார் நடிகை ஆல்யா மானசா.

ராஜா ராணி தொடரில் நடிப்பதற்கு முன்பாகவே ஆல்யா மானஸா ‘கலைஞர்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றிருந்தார். அந்த நிகழ்ச்சியில் அவருடன் ஜோடியாக ஆடிய மானஸ் என்பவரை ஆல்யா மானஸா காதலித்து வந்தார்.

தங்களைப் பற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆல்யா மானஸா தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வந்தார். இருவரும் காதலித்த போது ஒருவரின் பெயரை மற்றொருவர், தங்களது கைகளில் பச்சை குத்திக் கொண்டனர். அந்த புகைப்படங்களை கூட இருவரும் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார்கள். ஆனால், சில மாதங்கள் மட்டுமே நீடித்த இவர்களது காதல், பின்னர் பிரேக்கப்பில் முடிந்தது. அதன்பின்னர் தன்னுடன் ‘ராஜா ராணி’ தொடரில் நடித்த சஞ்சீவை காதலிக்க துவங்கினார் ஆல்யா. சமீபத்தில் இவர்கள் திருமணமும் செய்துக் கொண்டார்கள்.

இந்நிலையில் கையில் பச்சைக் குத்தியிருந்த முன்னாள் காதலரின் பெயரை வேறுவிதமாக மாற்றியிருக்கிறார் ஆல்யா. இதற்கிடையே பிரபுதேவாவை காதலித்த நயன்தாரா தனது கையில் P என டாட்டூ வரைந்திருந்தார். பிரேக்கப்பிற்குப் பிறகு, அதனை பாஸிட்டிவ் என மாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Alya manasa ex boy friend tatoo vijay tv nayanthara

Next Story
‘பிகில்’, ’கைதி’ படங்களுக்கு வெள்ளிக்கிழமை மட்டும் சிறப்புக் காட்சிக்கு அனுமதிThalapathy vijay, thalapathy vijay movies, vijay dance hits, vijay songs, தளபதி விஜய், விஜய் பாடல்கள், விஜய் டான்ஸ்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com