ஒரு காலத்தில் சினிமா நட்சத்திர நடிகர்கள், நடிகைகள்தான் பிரபலமாக இருந்தார்கள். ஆனால், தொலைக்காட்சிகள், ஓ.டி.டி, மொபைல்போன், சோசியல் மீடியா என பெருகிவிட்ட காலத்தில், சின்னத்திரை நடிகர்கள், நடிகைகளும் பிரபலமாக இருக்கிறார்கள். இப்போதெல்லாம், சினிமா நடிகைகளைவிட, சின்னத்திரை நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்கள். ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த சின்னத்திரை நடிகைகள், நடிகர்களின் சோசியல் மீடியா பக்கங்களைப் பின் தொடர்கிறார்கள். அவர்களைப் பற்றிய எல்லா வீடியோக்களையும் பார்த்துவிடுகிறார்கள். தங்களுக்கு பிடித்த நடிகை - நடிகர் ஜோடியாக நடித்தால் ரொம்பவே சந்தோஷப்படுகிறார்கள். அவர்கள் நிஜவாழ்க்கையில் திருமணம் செய்துகொண்டு ஜோடியாக சேர்ந்துவிட்டால், அளவில்லாத சந்தோஷம் அடைகிறார்கள். அதைவிட, தங்களுக்கு பிடித்த நடிகர் நடிகைகளின் ஆர்மியாக மாறிவிடுகிறார்கள்.
அந்த வகையில், சின்னத்திரையில் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற ஜோடி என்றால் அது ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்திக் ஜோடிதான்.
சின்னத்திரை நடிகை ஆல்யா மானசாவுக்கு என்று தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. டான்ஸராக தனது சின்னத்திரை வாழ்க்கையைத் தொடங்கிய ஆல்யா மானசா, விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் கதாநாயகியாக நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். ஆல்யா மானசா, ராஜா - ராணி சீரியலில் தனக்கு ஜோடியாக கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பின்னர், ஆல்யா மானசா, குழந்தைகள், குடும்பம் என சீரியலில் இருந்து சில மாதங்கள் ஒதுங்கி இருந்தாலும், தற்போது மீண்டும் சீரியலில் நடித்து வருகிறார்.
ஆல்யா மானசா, சன் டீவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் நடித்து வருகிறார். அதேபோல், சஞ்சீவ், கயல் சீரியலில் நடித்து வருகிறார். ஆல்யா - சஞ்சீவ் நடிக்கும் சீரியல்கள், டி.ஆர்.பி-யில் கலக்கி வருகின்றன. அவர்கள் நடிக்கும் சீரியல், டாப் 10 சீரியல்களில் தவறாமல் இடம் பிடித்து வருகின்றன.
ஆல்யா - சஞ்சீவ் தம்பதிக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். அண்மையில், இந்த ஜோடி, ரூபாய் 1.8 கோடி மதிப்பில், ஒரு பெரிய வீட்டைக் கட்டி முடித்தனர். இவர்களது ஹோம் டூர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், ஆல்யா மானசா தான் நடித்து வரும் இனியா சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு, தனது மகனை அழைத்துச் சென்றுள்ளார். அங்கே ஓய்வு நேரத்தில், தனது மகனுக்கு வாயில் முத்தம் கொடுத்தும், தன்னைப் போல போஸ் கொடுக்கச் சொல்லியும் கொஞ்சி மகிழ்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குழந்தை ஆல்யா மானசா எப்படி போஸ் கொடுக்கச் சொல்கிறாரோ அதேபோல, போஸ் கொடுக்கிறார்.
ஆல்யா மானசா தனது மகனைக் கொஞ்சி மகிழ்ந்து க்யூட்டாக முத்தம் கொடுக்கும் வீடியோ லைக்குகள் கமெண்ட்களைக் குவித்து வருகிறது. இந்த வீடியோவை பதிவிட்டுள்ள ஆல்யா மானசா, எனது மகன் நான் நடிக்கும் சீரியலின் படப்பிடிப்புத் தளத்தில் உள்ளார் என்று பதிவிட்டு கணவர் சஞ்சீவையும் டேக் செய்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.