Advertisment

ஐபிஎஸ் ஆகிவிட்டாரா சந்தியா? ராஜா ராணி 2 ரகசியம்

Alya manasa play IPS officer role in Raja rani 2 photo goes viral: ராஜா ராணி சீரியலில் ஐபிஎஸ் ஆக நடிக்கும் ஆல்யா மானசா; இணையத்தில் வைரலாகும் போட்டோ

author-image
WebDesk
New Update
ஐபிஎஸ் ஆகிவிட்டாரா சந்தியா? ராஜா ராணி 2 ரகசியம்

ராஜா ராணி 2 சீரியலில் இனிமேல் ஐபிஎஸ் கதாப்பாத்தில் நடிக்க போவதாக ஆல்யா மானசா தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழ் சீரியல் நடிகைகளில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் ஆல்யா மானசா. விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் ஆல்யா. அதே சீரியல் ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் ஆல்யா.

தற்போது ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகத்தில் சந்தியா என்ற கதாப்பாத்திரத்தில் ஆல்யா நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக சித்து நடிக்கிறார். சீரியலில் சந்தியா படித்த பெண் என்பதால், அவரது மாமியார் சந்தியாவிடம் பொறுப்பு மற்றும் தன்னடக்கத்தை சோதிக்க பல பரீட்சைகளை வைத்தார்.

சந்தியா படித்த பெண். மேலும் துணிச்சலானவர். 'ஐபிஎஸ்' ஆக வேண்டும் என்பது அவரின் கனவு. ஆனால் அவர் படித்த மருமகள் என்பதையே ஏற்றுக்கொள்ள முடியாத சந்தியாவின் மாமியார், சந்தியாவின் 'ஐபிஎஸ்' கனவுக்கெல்லாம் பச்சைக்கொடி காட்டுவாரா என்று சந்தேகம் இருந்து வந்தது.

publive-image

இந்நிலையில் சந்தியா, 'ஐபிஎஸ்' உடையில் தோற்றமளிக்கும் காட்சிகள் ஷூட்டிங்கில் படமாக்கப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்களை ஆல்யா மானசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த காட்சிகள் அடுத்தடுத்த எபிசோடுகளில் வரவிருப்பதாக தெரிகிறது.

தற்போது இந்த புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும், “என்னது..? சந்தியா ஐபிஎஸ் ஆகிவிட்டாரா?” என, ஆர்வம் தாளாமல் கேள்வி எழுப்பிவரும் ரசிகர்கள், அந்த எபிஷோடுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

publive-image

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Alya Manasa Vijay Tv Rajarani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment