Advertisment

கல்யாணம், புது வீடு, இப்போ கர்ப்பம் : ’ராஜா ராணி’ சஞ்சீவ், ஆல்யா மானசா!

இரு வீட்டாரும் சம்மதிக்காததால், கடந்த மே மாதமே இருவரும் ரகசிய திருமணம் செய்துக் கொண்டதாக, செப்டம்பர் மாதத்தில் இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார் சஞ்சீவ்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sanjeev Alya Manasa new born baby

Sanjeev Alya Manasa

Sanjeev - Alya Manasa : விஜய் டிவி-யில் ஒளிபரப்பான, ராஜா ராணி என்ற சீரியல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் கார்திக் - செம்பா ஜோடி ரசிகர்களிடம் வெகுவாக பிரபலமாகினர். சீரியல் முடிவதற்குள் சஞ்சீவும், ஆல்யா மானசாவும் நிஜ காதலர்களாக மாறினர்.

Advertisment

அதன் பிறகு, பெரும்பாலான இணைய தளங்கள் அவர்களது ரொமாண்டிக் நேர்க்காணலை போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்பினார்கள். விஜய் தொலைக்காட்சியோ மேடையில் வைத்து இருவருக்கும் நிச்சயதார்த்தம் செய்து வைத்தது. இதற்கிடையே இரு வீட்டாரும் சம்மதிக்காததால், கடந்த மே மாதமே இருவரும் ரகசிய திருமணம் செய்துக் கொண்டதாக, செப்டம்பர் மாதத்தில் இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார் சஞ்சீவ். இதனைத் தொடர்ந்து இந்த ஜோடிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர் நெட்டிசன்கள்.

சமீபத்தில் தர்மபுரியில் விஜய் நட்சத்திர கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் தொலைக்காட்சியின் நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்றனர். அப்போது மேடையில் பேசிய நடிகர் சஞ்சீவ், தனது மனைவியும், சின்னத்திரை நடிகையுமான ஆல்யா மானஸா கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். இதைக் கேட்ட ரசிகர்கள், தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அதோடு சில வாரங்களுக்கு முன்பு, இவர்கள் புது வீட்டுக்கு குடி போனது குறிப்பிடத்தக்கது.

Tv Serial Star Vijay Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment