கூச்சப்படவே இல்லை… குறைவான படிப்பையும் ஓபனாக சொன்ன ஆல்யா மானசா!

ஆல்யா மானாசா அப்படியேல்லாம் பொய் சொல்லாமல் குறைவான படிப்பு என்றாலும் கூச்சப்படாமல், வெளிப்படையாக உண்மையை சொல்லியிருக்கிறார். ஆல்யா இப்படி உண்மையை சொல்லியைதைக் கேட்டு ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

Alya Manasa says her real education qualification, raja rani serial actress alya manasa, alaya manasa education qualification, fans praises alya manasa, alya manasa says true, ராஜா ராணி, நடிகை ஆல்யா மானசா, ஆல்யாமனசா குறைவான படிப்பை கூச்சப்படாமல் உண்மையை சொன்னார், ரசிகர்கள் பாராட்டு, விஜய் டிவி, vijay tv, raja rani 2 serial, alya manasa says truth

யாராவது பிரபலங்களை நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள் என்று கேட்டால் உடனடியாக, நான் எம்.ஏ. பி.ஏ. டாக்டரேட் படிச்சிருக்கேன்னு அடிச்சு விடுகிற காலத்தில், ஆல்யா மாசனா குறைவான படிப்பையும் வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். கூச்சப்படாமல் உண்மையை சொல்லிய ஆல்யா மானசாவை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. ராஜா ராணி சீரியல் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது ராஜா ராணி சீரியல் 2வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ராஜா ராணி 2 சீசனிலும் ஆல்யா மானசாதான் ஹீரோயினாக நடிக்கிறார். அமைதியான அழகான தோற்றம், ரசிகர்களை ஈர்க்கும் குறும்புத்தனம் என ஆல்யா மானசா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.

ஆல்யா மானசா ராஜா ராணி சீரியல் முதல் சீசனில் தன்னுடன் ஜோடியாக நடித்த சஞ்சீவ்வை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஐலா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆல்யா மானசா, சீரியலில் பிஸியாக இருந்தாலும் மற்றொரு புறம் சமூக ஊடகங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார்.

ஆல்யா மானசா சமீபத்தில் தனது ரசிகர்களுடன் நடத்திய உரையாடலில், ரசிகர் ஒருவர், ஆல்யாவிடம் நீங்கள் உண்மையில் என்ன படித்திருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த ஆல்யா மானசா, “நான் உண்மையில் 12ம் வகுப்பு தான் முடித்துள்ளேன். சென்னை எத்திராஜ் கல்லூரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர்ந்தேன். ஆனால், படிப்பை தொடர முடியவில்லை” என கூறியுள்ளார்.

பொதுவாக பிரபலங்களிடம் யாராவது நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள் என்று கேட்டுவிட்டால், உனடியாக அவர்கள், நாம் குறைவாக படித்திருக்கிறோம் என்று தெரிந்தால் நம்மை குறைத்து மதிப்பிடுவார்களோ என்ற எண்ணத்தில், நான் எம்.ஏ படித்திருக்கிறேன், பி.எச்.டி ஆராய்ச்சி பண்றேன் என்று அடித்துவிடுவார்கள். ஆனால், ஆல்யா மானாசா அப்படியேல்லாம் பொய் சொல்லாமல் குறைவான படிப்பு என்றாலும் கூச்சப்படாமல், வெளிப்படையாக உண்மையை சொல்லியிருக்கிறார். ஆல்யா இப்படி உண்மையை சொல்லியைதைக் கேட்டு ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Alya manasa says her real education qualification fans praises her

Next Story
Sun TV Serial: ரோஜாவுக்கு எதிராக பெண் மந்திரவாதி காளி பூஜை; அடித்துத் துவைக்கும் அர்ஜுன்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express