/tamil-ie/media/media_files/uploads/2019/10/Alya-Manasa.jpg)
Alya Manasa
Bharathi Kannamma Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பான ”ராஜா ராணி” சீரியலில் முன்னணி கதாபாத்திரமாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் ஆல்யா மானஸா. இந்த சீரியலில் தன்னுடன் ஜோடியாக நடித்த சஞ்சீவுடன் ஆல்யாவுக்கு காதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஆல்யாவும் சஞ்சீவும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஜோடியாக வலம் வந்தனர்.
ராஜா ராணி சீரியல் முடிந்த கொஞ்ச நாட்களில் தாங்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டதாக, இன்ஸ்டாகிராமில் அறிவித்தார் சஞ்சீவ். பின்னர், சொந்த பிரச்னைகள் காரணமாக ஆல்யாவும் நானும் மே மாதமே திருமணம் செய்துக் கொண்டோம், என ஒரு நேர்க்காணலில் தெரிவித்தார் சஞ்சீவ்.
திருமணத்துக்குப் பிறகு ‘காற்றின் மொழி’ என்ற சீரியலில் நடித்து வருகிறார் சஞ்சீவ். ஆனால் கணவரின் மதமான இஸ்லாத்தை தழுவிய ஆல்யா, இனி நடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்து வந்தது. இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். அதாவது, பாரதியும் வெண்பாவும் மருத்துவ கல்லூரியில் ஓன்றாகப் படித்தவர்கள். வெண்பா பாரதியை காதலிக்க, அவளின் தோழி ஸ்வேதாவை (ஆல்யா) பாரதி காதலிக்கிறான். தன் காதலை ஸ்வேதாவிடம் சொல்லி ,பாரதியிடம் சொல்ல சொல்கிறாள் வெண்பா. பாரதியோ ஸ்வேதவைப் பார்த்து ”ஐ லவ் யூ” என்று சொல்லி விடுகிறான்.
இதனால் கோபமடையும் வெண்பா, ஸ்வேதா மீது லாரி ஏற்றி கொன்று விடுகிறாள். ஆகையால் திருமணத்துக்குப் பிறகு மீண்டும் சின்னத்திரையில் நுழைய பாரதி கண்ணாம்மா சீரியலின் மூலம் ஒத்திகை பார்த்திருக்கிறார் ஆல்யா. விரைவில் புதிய சீரியலில் களமிறங்குவார் என எதிர்பார்க்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.