Advertisment

பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கோலிவுட்டில் நடிக்கும் அமலா

தமிழ் சினிமாவில் 1980களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அமலா அக்கினேனி பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் படம் ஒன்றில் நடித்து கோலிவுட்டுக்கு வருகிறார். இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் இயக்கும் தமிழ் தெலுங்கு இரு மொழிப் படத்தில் ஷர்வானந்த்துக்கு அம்மாவாக நடிக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Amala Akkineni, Amala Akkineni comeback in Kollywood,அமலா அக்கினேனி, அமலா, கோலிவுட், shree karthik, high priestess, zee 5,high priestess web series

Amala Akkineni, Amala Akkineni comeback in Kollywood,அமலா அக்கினேனி, அமலா, கோலிவுட், shree karthik, high priestess, zee 5,high priestess web series

தமிழ் சினிமாவில் 1980களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அமலா அக்கினேனி பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் படம் ஒன்றில் நடிப்பதன் மூலம் கோலிவுட்டுக்கு வருகிறார்.

Advertisment

நடிகை அமலா அக்கினேனி, நடிப்பு மட்டுமல்லாமல், பரதநாட்டிய கலைஞர், விலங்குகள் நல ஆர்வலர் என பலமுகங்களைக் கொண்டவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மனைவி இவர்.

டி.ராஜேந்தரின் 'மைதிலி என்னைக் காதலி' படத்தின் மூலம் அறிமுகமாகி கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வந்த அமலா திருமணத்துக்குப் பிறகு நடிப்பில் ஒரு இடைவெளி ஏற்பட்டது.

கடந்த ஆண்டு ஜீ 5-இல் ஹைக் பிரிஸ்டெஸ் என்ற வெப் சீரிஸில் நடித்து புகழ்பெற்ற நடிகை அமலா அக்கினேனி மீண்டும் கோலிவுட்டில் நடிக்க உள்ளார்.

வியூகம், சைல்ட்வுட் டைரிஸ் போன்ற குறும்படங்கள் மூலம் அறியப்பட்ட இயக்குனர் ஸ்ரீ கார்த்திக். இவர் ஹைதராபாத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இன்னும் பெயரிடப்படாத பபடத்துகான படிப்பிடிப்புகளை நடத்தி வருகிறார். இந்தப் படத்தில் ஷர்வானந்த், ரிது வர்மா முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் அமலா ஷர்வானந்த்துக்கு அம்மாவாக நடிக்கிறார்.

இதன் மூலம் பல ஆண்டுகளுக்கு பிறகு அமலா அக்கினேனி கோலிவுட்டில் மீண்டும் நடிக்க உள்ளார்.

அதோடு, இந்தப் படத்தில் நாசர், சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். இந்த படம் முதலில் விஜய் தேவரகொண்டாவுக்காக எழுதப்பட்டதாகக் கூறப்படுக்கிறது. இந்தப் படம் 2020 ஆம் ஆண்டில் வெளியாக உள்ளது.

அமலா 1991 ஆம் ஆண்டு வெளியான கற்பூர முல்லை படத்தில் நடித்தார். அதற்குப் பிறகு அவர் 2018 ஆம் ஆண்டு துல்கர் சல்மானின் கர்வான் படத்தில் நடித்திருந்தார்.

அதே போல, ஷர்வானந்த் இயக்குனர் சேரனின் ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்தில் நடித்துள்ளார்.

Kollywood Amala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment