Aadai Box Office Collection: நடிகை அமலா பால் நடிப்பில் இறுதியாக ’ராட்சசன்’ திரைப்படம் வெளியாகியிருந்தது. ஹாரர் அண்ட் த்ரில்லர் படமான அதில் ஸ்கூல் டீச்சராக நடித்திருந்தால் அமலா. இந்நிலையில் கடந்த வெள்ளிக் கிழமை ‘ஆடை’ திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை ‘மேயாத மான்’ திரைப்படத்தை இயக்கிய ரத்ன குமார் இயக்கியிருந்தார்.
தமிழில் ’ஆடை’, என்ற பெயரிலும் தெலுங்கில் ‘ஆமே’ என்ற பெயரிலும் இந்தப் படம் உருவாகியிருந்தது. அமலா பாலுடன் இணைந்து வி.ஜே.ரம்யா, விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். சில பல லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும், கன்டென்டைப் பொறுத்தவரை சிறப்பான சினிமா என்று ‘ஆடை’ படத்தைப் பார்த்த பலரும் தெரிவித்திருந்தார்கள்.
இந்தப் படம் ஜூலை 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஃபைனான்ஸியல் பிரச்னைகளில் இப்படம் சிக்கியது. இதனால் ஆடை படத்தின் காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. அதோடு பத்திரிக்கையாளர் காட்சிகளும் திரையிடப்படவில்லை. பின்னர் படத்தின் நாயகியான அமலா பால், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு, தனது சம்பளத்தில் ஒரு பகுதியை விட்டுக் கொடுக்க முன்வந்தார். இதனால் வெள்ளிக்கிழமை மாலை 7 மணியளவில் இப்படம் ரிலீசானது. குறிப்பாக தனது சொந்த பணத்தில் இருந்தும் 25 லட்சத்தைக் கொடுத்திருக்கிறார் அமலா. இதனால் படத்திற்கான காட்சிகளும், திரைகளும் குறைந்தன. இருப்பினும் முதல் நாளில் சுமாரான ஓபனிங் ஆடை படத்திற்குக் கிடைத்தது. அதனால் அதிகபட்சமாக 1.29 கோடி ரூபாய் வசூலித்தது.
ஆடை படத்தைப் பற்றிய விமர்சகர்களின் பாஸிட்டிவான கருத்துகளால், திரையரங்குக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் இனி வரும் நாட்களில் கணிசமான வசூலை ஆடை திரைப்படம் பெறும் என்கிறார்கள் சினிமா எக்ஸ்பர்ட்ஸ்!
தவிர, பெண்ணுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கும் அமலா பால், தற்போது ‘அதோ அந்த பறவை போல’, ‘கடாவர்’ ஆகியப் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.