அமலா பால் நடித்திருக்கும் 'ஆடை' படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா!

வெறுமனே நடித்துவிட்டு போவதுதான் ஒரு நடிகையின் வேலை என்று வரையறை செய்யப்படவில்லை. அதனால், நான் ஏதோ ஒரு பெண் காதாபாத்திரம் தேவை என்பதற்காக ஒரு படத்தில்...

சுபகீர்த்தனா

இந்த வாரம் அமலா பால் நடிப்பில் வெளியாகும் ஆடை படத்துடன் தமிழ் சினிமாவின் முகம் மாறுவதை நாம் பார்க்கிறோம்.

விக்ரமும் அமலாபாலும் இந்த வெள்ளிக்கிழமை கோலிவுட்டின் பாக்ஸ் ஆஃபிஸில் சரிக்கு சரியாக போட்டிப்போட போகிறார்கள். இவர்களுடைய படங்கள் இரண்டுமே மிகவும் வித்தியாசமானவை. ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் கடாரம் கொண்டான் படம் ஒரு ஆக்‌ஷன் சாகச த்ரில்லர் படம். அதே நேரத்தில், ரத்னகுமார் இயக்கியுள்ள ஆடை படத்தின் நாயகி அமலாபால், ஆடை இல்லாமல் போஸ் கொடுத்துள்ள படத்தின் சர்ச்சை டீசர் வெளியாகி தலைப்புச் செய்தியானது. இந்த இரண்டு படங்களுமே சினிமா ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இருப்பினும், சினிமா வர்த்தக வட்டாரங்கள் நட்சத்திர நடிகர் விக்ரமின் கடாரம்கொண்டான் படத்துக்குதான் அதிக எதிர்பார்ப்பும் ஒப்பனிங்கும் இருக்கும் என்று நம்புகின்றன. கிடைத்த தகவலின்படி கடாரம்கொண்டான் படம் 500 திரையரங்குகளிலும், ஆடை படம் 350 திரையரங்குகளிலும் திரையிடப்பட உள்ளன.

பொதுவாக கதாநாயகனுக்கான திரைக்கதைதான் தமிழ் சினிமாவில் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால், இந்தப் போக்கில், கடந்த சில ஆண்டுகளில் நயன்தாரா, ஜோதிகா, டாப்ஸி பன்னு, சமந்தா அக்கினேனி போன்றவர்களாலும், வணிக சினிமா சூத்திரத்துக்குள் சிலர் செய்த பரிசோதனை முயற்சிகளாலும் வெகுவாக மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இருந்தாலும், இதில் நயன்தாரா படங்கள் மட்டுமே திரையரங்குகள் நிரம்பிவழிவதற்கு உத்தரவாதம் அளிக்கின்றன. தற்போது, மற்றவர்களும் இதை பின்பற்றுவதை பார்ப்பதற்கு இதமாக இருக்கிறது.

உதாரணமாக, மஹாநதி, சாவித்திரி வாழ்க்கை வரலாற்றுப் படம் உலகம் முழுவதும் ரூ.80 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அனுஷ்கா ஷெட்டியின் பாகமதி உலக அளவில் ரூ.65 கோடியை ஈட்டியது. இதே போல, காற்றின் மொழி, என்ற தமிழ் ரிமேக் படமான தும்ஹரி சுலு வெளியான இரண்டு நாட்களில் ரூ.4 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. கோலமாவு கோகிலா படம் தமிழகத்தில் மட்டும் தோராயமாக ரூ.30 கோடி வசூலித்துள்ளது.

இவையெல்லாம், சினிமா பார்வையாளர்களின் ரசனை மேம்பட்டிருப்பதைக் காட்டுகிறது. மேலும், திரைக்கதை, சிந்தனைகளில் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப சினிமா இண்டஸ்ட்ரி அதை எவ்வாறு சுவிகரித்துக்கொள்கிறது என்பதையும் பிரதிபலிக்கிறது.

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு வர்த்தக ஆய்வாளர் கூறுகையில், “ஒரு நடுத்தர அளவிலான ஹீரோ சம்பந்தப்பட்ட படத்தைவிட பெண் கதாநாயகிகளைக் கொண்ட திரைக்கதைகளை எளிதில் சந்தைப்படுத்தலாம்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார். மேலும், அவர் கூறுகையில், “உதாரணத்துக்கு ஐஸ்வர்யா ராஜேஷின் ‘கனா’ படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஐஸ்வர்யா ராஜேஷ் ஒன்றும் நட்சத்திர நடிகை இல்லை என்றாலும் சினிமா பார்வையாளர்கள் பெரிய அளவில் திரையரங்குகளில் குவிந்தார்கள். இதற்கு ஆவலை தூண்டியதுதான் முக்கிய காரணம். புதிய தலைமுறை பெண்கள் குடும்பத்துடன் கூட்டமாக வர மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் பெருக்கமும் மிக முக்கிய பங்கு வகித்துள்ளன. ஒரு நடிகையின் படம் தனியாக வெற்றி பெற்றால், இயல்பாகவே அது மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகிவிடுகிறது.

முன்பெல்லாம், நடிகைகள் மரத்தைச் சுற்றி நடனம் ஆடுவார்கள். ஆனால், இப்போது, உடல் மொழியிலும் வார்த்தையிலும் பெண்கள் உரத்தும் தைரியமாகவும் இருக்கின்றனர். ஆடுகளம் இன்னும் வெகுதொலைவில் இருந்தாலும்கூட அமலாபாலுக்கு வருங்காலம் பிரகாசமாக இருக்கிறது. இது குறித்து அமலா பால் கூறுகையில், “நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். ஒரு நடிகை மிகவும் துணிச்சலாக அடையக்கூடிய ஒரு படம் என்பதால்தான் நான் ஆடை படத்தில் நடித்தேன். உண்மையில், காமினியாக நடித்தபோது நான் சுதந்திரமடைந்தவளாக உணர்ந்தேன். ஒரு திரைப்பட இயக்குனர் போலி பெண்ணியக் கதையாக இல்லாமல் என்னை அணுகியதைப் பார்ப்பதற்கு புத்துணர்ச்சியாக இருந்தது. இயக்குனர் ரத்ன குமார் கதாபாத்திரங்களை சிக்கலான முறையில் எழுதியதுடன், சமகால முன் முடிவுகளை பிரதிபலிக்கும் விதத்தில் இருந்ததால் அவைகளில் நான் நிறைய நேர்மையைப் பார்த்தேன். மேலும், தமிழ் சினிமாவில் பெண்கள் நீண்ட காலமாக கருப்பு வெள்ளை சித்திரமாகவே தீட்டப்பட்டிருக்கிறார்கள்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், திரைப்படத்தை ஒரு கூட்டு செயல்பாடாக பார்க்கும் இயக்குனர்களுடன் வேலை செய்வதையே அவர் வரவேற்பதாகக் கூறினார். இதனால்தான், கதாநாயகிகள் இந்த புராஜெக்ட்களில் இணை தயாரிப்பாளர்களாகிறார்கள். எனது கருத்து ஒரு கதையை உருவாக்குவதிலிருந்து தொடங்குகிறது. அந்த வழியில் அது எளிதாக மாற்றமடைகிறது. நான் என்னுடைய கதாபாத்திரத்தை மிகவும் ஈர்க்கக்கூடியதாகவும், சதித்திட்டத்துக்கு பொருத்தமானதாகவும் மாற்ற முடியும் என்று அமலா பால் கூறுகிறார்.

டாப்ஸி பன்னுவும் இதே கருத்தை கொண்டிருக்கிறார். வெறுமனே நடித்துவிட்டு போவதுதான் ஒரு நடிகையின் வேலை என்று வரையறை செய்யப்படவில்லை. அதனால், நான் ஏதோ ஒரு பெண் காதாபாத்திரம் தேவை என்பதற்காக ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று கூறுகிறார்.

மேலும், தமிழ் சினிமாவில் பெண் கதாபாத்திரங்கள் எப்படி சித்தரிக்கப்படுகின்றனர் என்பது பற்றி வருத்தப்படும் டாப்ஸி, “ஆண்களை உறுதியானவர்களாகவும் வெற்றியாளர்களாகவும் சித்தரிக்கும்போது பெண் கதாபாத்திரங்களை அழகும் கவர்ச்சியும் நிறைந்த துணைகளாக சித்தரிக்கின்றனர்” என்று குறிப்பிட்டு சாடுகிறார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close