Aadai Teaser: அமலா பாலின் ‘போல்டான’ நடிப்பில் ‘ஆடை’ டீசர்!

ஏற்கனவே இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

ஏற்கனவே இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Amala Paul's Aadai Teaser Released

நடிகை அமலா பால் இறுதியாக ‘ராட்சசன்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனை ’முண்டாசுப்பட்டி’ படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கியிருந்தார்.

Advertisment

இதைத் தொடர்ந்து தற்போது ’ஆடை’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். த்ரில்லர் படமாக உருவாகியுள்ள, இதனை ’மேயாத மான்’ படத்தை இயக்கிய ரத்ன குமார் இயக்கியுள்ளார்.

வி ஸ்டூடியோஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.

காமினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அமலா பால், ஒரு கடினமான சூழ்நிலையை எவ்வாறு கையாண்டு மீள்கிறார் என்பது தான் ‘ஆடை’ படத்தின் ஒன்லைன்.

Advertisment
Advertisements

ஏற்கனவே இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அமலா பாலின் ‘போல்டான’ அட்டெம்ப்டுக்காக ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதனை பாலிவுட்டின் பிரபல இயக்குநர் கரண் ஜோகர் வெளியிட்டுள்ளார். முன்னதாக ஆடை டீசரை கரண் வெளியிடும் தகவலை ட்விட்டரில் அறிவித்திருந்த அமலா, ’பாலிவுட்டின் கிங்மேக்கர் ஆடை டீசரை வெளியிடுவது’ மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இந்த டீசர் தற்போது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தவிர, பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோஹர் ஆடை படத்தின் டீசரை வெளியிட்டுள்ளதால், பாலிவுட்டிலும் இப்படம் ரீமேக் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

Producer Karan Johar Amala Paul Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: