/tamil-ie/media/media_files/uploads/2019/10/Amala-paul-jagapathy.jpg)
amala paul, amala paul jagapathi babu, telugu lust stories, lust stories, nandini reddy, அமலா பால், தெலுங்கில் லஸ்ட் ஸ்டோரிஸ், netlfix, jagapathi babu, director nandini reddy, Tamil Indian Express
Amala Paul and Jagapathi Babu in Telugu Lust Stories: நெட்ஃபிளிக்ஸுக்காக இயக்குனர் நந்தினி ரெட்டி பி.வி தெலுங்கில் இயக்கும் லஸ்ட் ஸ்டோரிஸ் வெப் சீரிஸில் நடிகை அமலா பால் நடிக்க உள்ளார்.
‘ஓ பேபி’ புகழ் இயக்குனர் நந்தினி ரெட்டி பி.வி நெட்ஃபிக்ஸ் வெப் சீரிஸ் லஸ்ட் ஸ்டோரிஸ் (தெலுங்கு) தொடரில் நடிப்பதற்கு நடிகை அமலா பால் மற்றும் ஜெகபதி பாபுவும் இணைந்துள்ளார்கள். இதில் நடிகை அமலா பால் மற்றும் நடிகர் ஜெகபதி பாபு முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். இதில் ‘தி காசி அட்டாக்’ புகழ் சங்கல்ப் ரெட்டி கதையின் ஒரு பகுதியை இயக்குவார் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது.
இந்த சீரிஸ் உருவாக்கத்தில் நெருக்கமாக உள்ள சிலர் இதனை உறுதி செய்துள்ளனர். மேலும், அவர்கள் கூறுகையில், “ஆமாம், இது உண்மைதான். நந்தினி ரெட்டி தெலுங்கில் நெட்ஃபிளிக்ஸ்க்காக லஸ்ட் ஸ்டோரிஸ் தொடரின் ஒரு பகுதியை இயக்க வேலைகளைத் தொடங்கிவிட்டார். இதில் அமலா பால் ஜெகபதி பாபு முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.
ஒரு சில செய்திகள் தேசிய விருது பெற்ற இயக்குனர் தருண் பாஸ்கரும் தொடரின் ஒரு பகுதியை இயக்க முன்வந்துள்ளதாக கூறுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்துவதற்காக காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
லஸ்ட் ஸ்டோரிஸை இந்தியில் தயாரித்த ஆர்.எஸ்.வி.பி தயாரிப்பு நிறுவனம்தான் தெலுங்கிலும் தயாரிக்கிறது. இதனை இந்தியில், நான்கு கதை பிரிவுகளை பிரபல திரைப்பட தயாரிப்பாளர்களான கரண் ஜோஹர், சோயா அக்தர், அனுராக் காஷ்யப் மற்றும் திபாகர் பானர்ஜி ஆகியோர் இயக்கியுள்ளனர். இதில் கியாரா அத்வானி, பூமி பெட்னேகர், மனிஷா கொய்ராலா, ராதிகா ஆப்தே ஆகியோர் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.