Advertisment
Presenting Partner
Desktop GIF

கையில் குழந்தையுடன் முதலாம் ஆண்டு திருமண நாள் கொண்டாடிய அமலா பால்; போட்டோஸ் வைரல்

நடிகை அமலா பால் கையில் குழந்தையுடன் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியுள்ளார். இது தொடர்பாக அமலா பால், அவரது கணவர் மற்றும் குழந்தை சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
amala

அமலா பால், அவரது கணவர் மற்றும் குழந்தை சேர்ந்து எடுத்துக்கொண்ட  புகைப்படங்கள் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

நடிகை அமலா பால் கையில் குழந்தையுடன் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியுள்ளார். இது தொடர்பாக அமலா பால், அவரது கணவர் மற்றும் குழந்தை சேர்ந்து எடுத்துக்கொண்ட  புகைப்படங்கள் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

Advertisment

நடிகை அமலா பால் முதல் கணவர் இயக்குனர் ஏ.எல். விஜய்யை விவாகரத்து செய்ததைத் தொடர்ந்து, தனது நீண்ட கால நண்பர் ஜகத் தேசாய்-யை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி அமலா பால் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

amala

இந்நிலையில், நடிகை அமலா பால் தனது குழந்தையுடன் காரில் இருந்து இறங்கி வரும் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். இன்று தனது திருமண நாளை கணவர் மற்றும் குழந்தையுடன் கொண்டாடியுள்ளார்.

amala

அமலா பால் தனது முதலாம் ஆண்டு திருமணம் நாள் அனிவர்சரியை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அதுமட்டுமல்ல, கணவர் ஜகத் தேசாய்க்கு லிப் லாக் முத்தம் கொடுத்து திருமண நாளை கொண்டாடிய ரொமான்டிக் புகைப்படங்களை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

amala

அமலா பாலின் கணவர் ஜகத் தேசாய் குழந்தையை வைத்திருக்கும் அழகான புகைப்படம் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. 

அதே போல, நடிகை அமலா பால், கணவருடன் கட்டிப் பிடித்து ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

amala

அதே நேரத்தில், நடிகை அமலா விரைவில் உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Amala Paul
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment