2-ம் திருமணம் பற்றித்தான் பேசுகிறாரா? ஆடை நாயகியின் சூசக ட்வீட்
தமிழ், மலையாள சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அமலா பால் அவருடைய புதிய டுவிட்டர் பதிவில் தனது 2-ம் திருமணம் பற்றி சூசகமாக பேசுவதாக நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.
தமிழ், மலையாள சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அமலா பால் அவருடைய புதிய டுவிட்டர் பதிவில் தனது 2-ம் திருமணம் பற்றி சூசகமாக பேசுவதாக நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.
amala paul, amala paul clarifies her second marriage, amala paul tweet quote of rune lazuli words, அமலா பால், அமலா பால் 2வது திருமணம் பற்றி விளக்கம், தமிழ் சினிமா செய்திகள், கோலிவுட், அமலா பால் டுவிட், writer rune lazuli, tamil cinema news, actess amala paul, amala paul news, kollywoos actress news, tamil cinema actress news, amala paul tweet
தமிழ், மலையாள சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அமலா பால் அவருடைய புதிய டுவிட்டர் பதிவில் தனது 2-ம் திருமணம் பற்றி சூசகமாக பேசுவதாக நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.
Advertisment
தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமாவின் நட்சத்திர நடிகையாக வலம் வருகிறார் நடிகை அமலாபால். தமிழில் வேட்டை, மைனா, தெய்வத்திருமகள், தலைவா ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமா உலகின் நட்சத்திர நடிகையாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டவர் நடிகை அமலா பால். ஹீரோக்களுடன் டூயட் பாடும் வெறுமனே ஹீரோயினாக மட்டுமல்லாமல், சமூகத்தின் ஆணாதிக்க மதிப்பீடுகளை உடைத்து அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து கோலிவுட், மோலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்தார். ஆடை படத்துக்குப் பிறகு, அமலா பால் கதாநாயகியை மட்டும் மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள ‘அதோ அந்த பறாவை போல, ‘காடவர்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும்ம் அமலா பாலுக்கு ஒரு பெரிய பிரேக் கொடுக்கும் என்று சினிமா வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisment
Advertisements
அமலா பால் இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்டார். விரைவிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக சட்டப்படி விவாகரத்து பெற்றுக்கொண்டனர். இதையடுத்து, அமலா பால் 2-ம் திருமணம் பற்றி ரசிகர்கள் கேட்டு வந்தனர்.
சில வாரங்களுக்கு முன்பு, அமலா பால் மற்றும் பாலிவுட் பாடகர் பவனிந்தர் சிங், பஞ்சாபி வழக்கத்தில் நடைபெறும் திருமணக் கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. ஆனால், அமலா பால் இது பற்றி எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இதனைத்து தொடர்ந்து, தமிழ் செய்தித்தாள் ஒன்று பேட்டியளித்த அமலா பால், என்னுடைய திருமண வேறு ஒரு தருணத்தில் நடைபெறும். நான் தற்போது சினிமாவில் பிசியாக இருக்கிறேன். திருமணம் நடந்ததும் எனது திருமணத்தைப் பற்றி அறிவிப்பேன். என்னுடைய காதல் பற்றி பேசினேன். அதே போல, எனது திருமணத்தைப் பற்றியும் பேசுவேன். அதுவரை எனது திருமணம் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறி அவருடைய திருமணம் தொடர்பான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
How bewitching it is, that moment when you realize you are your own twin flame, protector, soul mate, beloved, sacred spirit of hope, mantra of freedom, Prophet, Buddha, spirit guide, divine counterpart, hero and healer. ❣️
இந்த நிலையில், அமலா பால் தனது டுவிட்டர் பக்கத்தில் சிறுகதை எழுத்தாளர் ரூன் லஸுலியின் மேற்கோள் வரிகளை பதிவிட்டுள்ளார். ரூன் லஸுலியின் “நீங்கள் உங்களுடைய சொந்த இரட்டைச் சுடரை, பாதுகாவலரை, ஆத்ம துணையை, அன்பானவரை, நம்பிக்கையின் புதிய சக்தியை, சுதந்திர மத்திரத்தை, நபிகள், புத்தர், வழிகாட்டும் சக்தியை, தெய்வீக இணையை, ஹீரோ மற்றும் ஹீலரை அறியும்போது அது எவ்வளவு மயக்கம் அளிக்கிறது” என்ற வரிகளை அமலா பால் பதிவிட்டுள்ளார்.
அமலா பால் ரூன் லஸுலியின் இந்த வரிகளை டுவிட் செய்ததன் மூலம் அவர் தனது காதலரைக் கண்டடைந்ததையும் 2-ம் திருமணத்தைப் பற்றியும்தான் சூசகமாக கூறுகிறாரா என்று நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"