கேரளாவில் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதி மறுக்கப்பட்டது குறித்து நடிகை அமலா பால் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் திருவைராணி குளம்மகாதேவர் கோயில் உள்ளது. இது சிவன் – பார்வதி உள்ள இந்துக் கோயிலாகும். நடிகை அமலா பால் இந்தக் கோயிலில் சாமிதரிசனம் செய்வதற்காக தனது குடும்பத்துடன் திங்கட்கிழமை சென்றார். ஆனால், கோயில் நிர்வாகிகள், இங்கு இந்துக்கள் மட்டுமே செல்ல வேண்டும் என்ற நடைமுறை உள்ளது என்று கூறி அமலா பாலுக்கு அனுமதி மறுத்துள்ளனர். பின்னர் அமலா பால் கோயிலுக்கு வெளியில் நின்று தரிசனம் செய்தார்.
இதையும் படியுங்கள்: ‘பாக்ஸ் ஆபீஸ் கிங் தளபதி’: விஜயுடன் நடிகர் ஷாம் வீடியோ
இதுபற்றி கோயிலின் பார்வையாளர்கள் பதிவேட்டில், "கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய ஆர்வத்துடன் வந்தேன். அனுமதி மறுக்கப்பட்டது. 2023-ம் ஆண்டு ஆண்டிலும் மதப் பாகுபாடு நிலவுவது வருத்தமும் ஏமாற்றமும் அளிக்கிறது. மதப் பாகுபாடுகளில் விரைவில் மாற்றம் வரும் என நம்புகிறேன். மதத்தின் அடிப்படையில் அல்லாமல், அனைவரும் சமமாக நடத்தப்படும் காலம் வரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் செய்தி வைரலானதை அடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கோயில் அறக்கட்டளை நிர்வாகி பிரசூன் குமார் கூறுகையில், “பிறமதத்தை சேர்ந்த பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். ஆனால், அதுயாருக்கும் தெரியாது. ஆனால், பிரபலங்களைஅனுமதித்தால் அது எல்லோருக்கும் தெரிந்துவிடுகிறது. பின் நடைமுறையை மீறியதாக சர்ச்சையாகி விடும். அதனால்தான் அனுமதிக்கவில்லை. நீண்டகாலமாக நடைமுறையில் உள்ள நெறிமுறைகளை மட்டுமே நாங்கள் பின்பற்றி வருகிறோம்” என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil