நடிகை அமலா பால் ‘மைனா’ திரைப்படத்தின் மூலம் தமிழில் பிரபலமானார். பின்னர் விஜய், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தார். இயக்குநர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்துக் கொண்டு, ஒரே வருடத்தில் விவாகரத்தானார். அதன் பிறகு நடிப்பில் கவனம் செலுத்திய அமலா பாலுக்கு, கடந்த வருடம் ரத்ன குமார் இயக்கிய ’ஆடை’ படத்தில் போல்டான ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு அமலாவின் வேறெந்த படங்களும் வெளியாகவில்லை.
தனது பரபரப்பான சமூக ஊடக பதிவுகள் மற்றும் ஹாட் போட்டோ ஷூட்களுக்காக பெரிதாக பேசப்பட்டார் அமலா பால். இப்போது அவர் ஒரு புதிய ஃபோட்டோ ஷூட்டின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். “புகைப்படக் கதை! அத்தியாயம் 1: எனக்குள் தன்னை இணைத்துக் கொண்டு, மறந்துபோன சிறுமிக்கு ஒரு காதல் குறிப்பை எழுதுவது. ??” என அதற்கு தலைப்பிட்டிருந்தார் அமலா. இந்தப் படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
தமிழில் அடுத்ததாக ‘அதோ அந்த பறவை போல’ படம் அமலா பால் நடிப்பில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”