/indian-express-tamil/media/media_files/alICwnb4uIkevDF7ncAs.jpg)
Amala paul
பாலிவுட் திரையுலகின் பிரபல மேக்கப் கலைஞர் மற்றும் ஹேர் ஸ்டைலிஸ்ட் ஹேமா சமீபத்தில் இந்தி யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், நடிகை அமலா பாலிடம் தனக்கு நிகழ்ந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்த கொண்டார்.
அவர் கூறுகையில், “ஒருமுறை சென்னையில் அமலா பாலுடன் படப்பிடிப்புக்கு சென்றேன். ஏப்ரல், மே மாதத்தில் கடும் வெயிலில் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றது. நாங்கள் சென்ற இடத்தில் கொஞ்ச நேரம் நிழலில் உட்காரலாம் என்றால் கூட ஒரு செடியோ, மரமோ இல்லை.
அதனால் கேரவேனுக்குள் உட்கார்ந்து கொண்டோம்.
ஆனால் நான் உட்கார்ந்த உடனே அமலா பால் தனது மானேஜரை அழைத்து என்னை வேனை விட்டு வெளியேறும்படி சொல்லி அனுப்பினார். நானும் இன்னும் சிலரும் அங்கு உட்கார்ந்திருந்தோம். இவ்வளவு கடுமையான வெயிலில் எங்கு போய் நிற்பது என்று யோசித்தோம். ஆனால் நாங்கள் இறங்கும் வரை அவர் விடவில்லை. அதனால் வேனை விட்டு இறங்கினோம்.
அப்படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை இதுபோல் பல சம்பவங்கள் எனக்கு நடந்தது.
நான் பல ஸ்டார் நடிகைகளுக்கு மேக்கப் போட்டு இருக்கிறேன். அவர்கள் அனைவரும் என்னிடம் மிகவும் கனிவாக நடந்து கொள்வார்கள். நடிகை தபு எங்களை போன்ற கலைஞர்களுக்காக வேன் எல்லாம் கூட புக் செய்து நன்றாக பார்த்துக்கொண்டார். ஆனால், அமலா பால் கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல் எங்களிடம் நடந்து கொண்டார்.
கேமரா முன் நடிக்கும் நடிகர்களை அழகாக காமிப்பதற்கு எங்களது முழு உழைப்பை நாங்கள் தருகிறோம், திரைத்துறையில் நாங்களும் முக்கிய பங்கை வகிக்கிறோம், இருந்தாலும் பல நேரங்களில் அவர்களுக்கு உரிய மரியாதையோ, அங்கீகாரமோ கொடுக்கப்படுவது இல்லை, என்றார்.
அமலா பால், ஜகத் தேசாய் இருவருக்கும் கடந்தாண்டு நவம்பர் 6ஆம் தேதி திருமணம் நடந்தது. ஜகத் தேசாய் கோவாவில் உள்ள பிரபல சொகுசு வில்லாவின் மேலாளராக உள்ளார்.
இந்நிலையில், அமலா பாலுக்கு கடந்த ஜூன் 11ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.
தம்பதியினர் தங்கள் குழந்தைக்கு ’இலை’ என்று அழகான தமிழ் பெயர் சூட்டியுள்ளர். அமலா பால் நடிப்பில் கடைசியாக வெளியான அடுஜீவிதம் படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.