மொட்டை தலையில் முத்தம்: புதிய நண்பருடன் அமலா பால்!

கடந்த வருடம் வெளியான ‘ஆடை’ படத்திற்குப் பிறகு வேறு எந்த படமும் அமலாவுக்கு வெளியாகவில்லை.

By: Published: June 12, 2020, 10:05:33 AM

Amala Paul Instagram: நடிகை அமலா பால் 2014-ல் பிரபல இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் சில வருடத்திலேயே அவர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். பின்னர் வேறு திருமணம் செய்துக் கொண்ட விஜய்க்கு சமீபத்தில் குழந்தையும் பிறந்தது.

இது போன்ற ஆபத்தான நேரத்தில் உதவும் நண்பன்: ‘கூகுள் மேப்’ வெறும் விளையாட்டு அல்ல!

இதற்கிடையே அமலா பால் தற்போது ஒருவரை காதலித்து வருவதாக பேட்டிகளில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் திருமணம் பற்றிய எந்த முடிவும் தெரியவில்லை. இந்நிலையில் அவர் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டதாக சில மாதங்கள் முன்பு புகைப்படங்கள் பரவின. பின்னர் அது போட்டோஷூட் என விளக்கம் அளித்தார்.

தவிர அமலா பால் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். கடந்த வருடம் வெளியான ‘ஆடை’ படத்திற்குப் பிறகு வேறு எந்த படமும் அமலாவுக்கு வெளியாகவில்லை. சமூக வலைதளங்களில் அவ்வப்போது படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு வேட்டி சட்டையில் இருக்கும் படத்தை வெளியிட்டிருந்தார்.

பொன்விழா ஆண்டில் மூடுவிழா காணும் ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கம் – சென்னை மக்கள் ஷாக்

இந்நிலையில் தற்போது ஆண் நண்பரின் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார் அமலா. அதில் அந்த நபரின் மொட்டை தலையில் முத்தம் கொடுப்பது போன்ற ஒரு புகைப்படமும் உள்ளது. “I found myself a spot in the wild things tribe” என அது பற்றி குறிப்பிட்டுள்ளார் அமலா பால். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

அதோடு அமலா வெளியிட்டுள்ள வீடியோவில், அந்த நபரின் மொட்டை தலையில் கேக் பூசி விளையாடியதும் தெரிகிறது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Entertainment News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Amala paul instagram photo with her new friend

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X