வெள்ளத்தில் மிதக்கும் கேரள மக்கள்.. தனியாக களத்தில் இறங்கிய அமலாபால்!

நடிகை அமலாபால் வெள்ளத்தில் மிதக்கும் கேரள மக்களுக்கு உதவும் விதமாக தனியாக களத்தில் இறங்கியுள்ளார். கையில் கட்டுடன் அமலாபால் : இயற்கையின் சொர்க்க பூமி என்று அழைக்கப்படும் கேரளா தற்போது வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.   கடந்த 100 வருடங்களில் இல்லாத அளவுக்கு மழையின் அளவு அதிகரித்துள்ளது.  கேரளாவில் தற்போது…

By: Updated: August 18, 2018, 04:22:12 PM

நடிகை அமலாபால் வெள்ளத்தில் மிதக்கும் கேரள மக்களுக்கு உதவும் விதமாக தனியாக களத்தில் இறங்கியுள்ளார்.

கையில் கட்டுடன் அமலாபால் :

இயற்கையின் சொர்க்க பூமி என்று அழைக்கப்படும் கேரளா தற்போது வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.   கடந்த 100 வருடங்களில் இல்லாத அளவுக்கு மழையின் அளவு அதிகரித்துள்ளது.  கேரளாவில் தற்போது வந்துள்ள வெள்ளம், சென்னையில் வந்ததை விட 3 மடங்கு அதிகம் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கி இதுவரை 324 உயிரிழந்துள்ளனர்.கொட்டும் மழையிலும் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.கேரளாவுக்கு நிவாரண நிதி அளிக்க  பல்வேறு  நாடுகளும்,  அமைப்புகளும், நடிகர் நடிகைகளும் முன்வந்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை அமலாபால்  கேரள மக்களுக்காக களத்தில் இறங்கியுள்ளார். கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை பொருள்களை அவரே நேரில் சென்று வாங்கி அதை சரியான இடத்திற்கு அனுப்பும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றார்.

கையில் கட்டுடன் கடையில் நிவாரண பொருள்கள் வாங்கி வரும் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.  சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் அமலாபாலின் கையில் காயம் ஏற்பட்டது.  இதற்காக அவர் கொச்சியில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுக்க சென்றார்.

ஆனால் அதற்குள் கேரளா முழுவதும்  வெள்ளம் சூழ்ந்தால் தற்போது அவரும் களத்தில் இறங்கி விட்டார். தனக்கு உடல்நிலை சரியில்லாதபோதும் களத்தில் இறங்கி மக்களுக்குத் தேவையானவற்றை வழங்கிய அமலாபாலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Amala paul joins in flood relief

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X