நைட் டிரெஸ்ஸுடன் அமலாபால் - ரசிகர்களின் கமெண்ட்ஸ் என்ன தெரியுமா?
பிரபல நடிகர்கள் கூட பணத்தை விட்டுக் கொடுக்க யோசிக்கும் நேரத்தில், ஒரு நடிகை அதுவும் முன்னணியில் இல்லாத நடிகையான அமலா பால், 15 லட்சத்தை கொடுத்தது பலரையும் வியக்க வைத்தது
பிரபல நடிகர்கள் கூட பணத்தை விட்டுக் கொடுக்க யோசிக்கும் நேரத்தில், ஒரு நடிகை அதுவும் முன்னணியில் இல்லாத நடிகையான அமலா பால், 15 லட்சத்தை கொடுத்தது பலரையும் வியக்க வைத்தது
Amala paul latest photo amala paul photo - நைட் டிரெஸ்ஸுடன் அமலாபால் - ரசிகர்களின் கமெண்ட்ஸ் என்ன தெரியுமா?
சமீப காலமாக திரையுலகிலும் சரி, மக்கள் மத்தியிலும் சரி அமலபாலின் துணிச்சல் பாராட்டப்பட்டு வருகிறது. அதற்கு காரணம், சமீபத்தில் வெளியான அவரது 'ஆடை' திரைப்படம். நிர்வாணமாக நடித்தார் என்பதற்காக மட்டுமே துணிச்சல் என்று சொல்லிவிடவில்லை... அந்தப் படத்தின் ரிலீஸின் போது ஏகப்பட்ட பிரச்சனை அரங்கேறியது.
Advertisment
அப்படத்தின் தயாரிப்பளார் நிதிப் பிரச்சனையில் சிக்கிக் கொள்ள, ரிலீசுக்கு முந்தைய நாள் ஒரு பஞ்சாயத்தே நடந்தது. திரையுலகின் முக்கிய நபர்கள் சிலர், அந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அமலபாலும் அங்கு இருந்தார்.
ஒருக்கட்டத்தில் பொறுமையிழந்த அமலா பால், படம் ரிலீசாக வேண்டும் என்பதற்காக, தனது சொந்த பணம் 15 லட்ச ரூபாயை கையோடு கொடுக்க, திட்டமிட்டப்படி வெளியானது ஆடை. பிரபல நடிகர்கள் கூட பணத்தை விட்டுக் கொடுக்க யோசிக்கும் நேரத்தில், ஒரு நடிகை அதுவும் முன்னணியில் இல்லாத நடிகையான அமலா பால், 15 லட்சத்தை கொடுத்தது பலரையும் வியக்க வைத்தது.
Advertisment
Advertisements
இந்த சம்பவத்தை பதிவு செய்தது பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன்.
அப்படி துணிச்சல்காரியாக வலம் வரும் அமலா தற்போது வெளியிட்டுள்ள அவரது புகைப்படம் ஒன்று ரசிகர்களிடையே அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.