Amala Paul: காதல் என்னை குணப்படுத்தியது! - அமலா பால்!

Amala Paul: ஒரு ஓவியர் நிர்வாண விஷயங்களை வரைகிறார் என்றால் அது அவருடைய வேலை. அதேபோல், நடிப்பு எனது வேலை.

Amala Paul: ஒரு ஓவியர் நிர்வாண விஷயங்களை வரைகிறார் என்றால் அது அவருடைய வேலை. அதேபோல், நடிப்பு எனது வேலை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Amala Paul about her partner, aadai promotions

Amala Paul

Subhakeerthana

Advertisment

Amala Paul's Aadai: மிக இயல்பாகவும், நம்பிக்கையுடனும், புன்னகையுடனும் இந்த நேர்காணலை எதிர்கொள்கிறார் நடிகை அமலா பால். கண்களை அடையும் அழகான புன்னகை, ஆர்வம் மிகுந்த சுறுசுறுப்பு, பேச்சில் தீவிரம் என தேநீரோடு பேச ஆரம்பிக்கிறார்.

”நான் இப்போது தான் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் உணர்கிறேன். இது என் வாழ்க்கையின் சிறந்த கட்டம். மாற்றம் ஒரே இரவில் நடக்காது. நிறைய உள்நோக்கம், உணர்தல் மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் இருந்தால் தான் அது நடக்கும். அப்படித்தான் நான் இங்கே இருக்கிறேன்.” என்றவரிடம்,

கடந்த காலங்களில் ஏற்பட்ட பூதாகரமான விஷயங்கள், நெகட்டிவிட்டி மற்றும் தனிப்பட்ட பிரச்னைகள் என எதுவாலும் உங்களை தடுத்து நிறுத்த முடியவில்லை, ஜென் வாழ்க்கையை வாழ்கிறீர்கள் என்றதற்கு, 

Advertisment
Advertisements

Amala Paul Aadai Movie அமலா பால்

”நான் நடிக்க வரும்போது எனக்கு 17 வயது. அப்போது எனக்கு எதுவும் தெரியாது. நான் யார், என்ன செய்தேன் என்பதை கூட மறந்துவிட்டேன். எனது திருமணம் தோல்வியுற்ற போது, என்னால் அதை கையாள முடியவில்லை. உலகமே எனக்கெதிராய் இருந்தது. அந்த சமயத்தில் நான் தனியாக இருப்பதை உணர்ந்தேன். எங்காவது ஓடி விடலாம் என விரும்பினேன். அது மிகுந்த வேதனையாக இருந்தது. நடந்த எல்லாவற்றிற்கும் நான் என்னைக் குற்றம் சாட்டிக் கொண்டே இருந்தேன்.

இந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க - Love healed me: Amala Paul

2016-ம் ஆண்டு, நான் இமயமலைக்கு பயணித்தேன். இது வாழ்க்கையைப் பற்றிய எனது அணுகுமுறையை மாற்றியது. ஃபேன்ஸியான் ஆடைகள், சன்ஸ்கிரீன், லிப் பாம், செருப்பு மற்றும் பலவற்றை பையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்ததாக நினைவு. நான்கு நாட்கள் மலையேற்றத்திற்குப் பிறகு, என்னிடம் எதுவுமே இல்லை. மொபைல் போன் இல்லாமல், கூடாரங்களில் தூங்கினேன். என்னுடைய பல கேள்விகளுக்கு, நிறைய பதில்களைக் கண்டுபிடித்து தொலைந்து போன என்னை மீண்டும் கண்டுபிடித்தேன்.

நம்புங்கள், இதில் நான் இழந்த என்னை மீண்டும் பெற்றேன். வெறுமையாக உணர்வது மாறியது. உங்கள் உள் சக்தியை நீங்கள் உணரும்போதுதான், இதெல்லாம் உணர முடியும். நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் ஒரு காரணமுண்டு, இதெல்லாம் கர்மா.

Amala Paul aadai movie அமலா பால்

நான் இனி பொருள் சார்ந்த விஷயங்களுக்குப் பின்னால் இருக்கப்போவதில்லை. புதுச்சேரியில் நான் ஒரு எளிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். மாதத்திற்கு ரூ.20,000 செலவிடுகிறேன். எனது மெர்சிடஸ் காரை விற்றுவிட்டேன். அது என் ஈகோவுக்கு உணவளித்தது தான் காரணம். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க சைக்கிளில் செல்கிறேன். உள்ளூர் ஆட்டோக்காரர்கள் என்னைப் பார்த்து புன்னகைக்கிறார்கள். யோகா, தோட்டக்கலை, வாசிப்பு மற்றும் இண்டெர்நெட் ஆகியவை என்னை உயிர்ப்போடு வைத்திருக்கின்றன. நான் இமயமலையில் தங்க விரும்பினேன். அது கடினம் என்பதால் தான், புதுச்சேரியைத் தேர்ந்தெடுத்தேன்.

ஓய்வெடுக்கிறோம், உணவைப் பகிர்ந்து கொள்கிறோம், கிடார் வாசிப்போம், இசை கேட்கிறோம். இது எல்லாமே வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்டது. நான் ஒரு ஆயுர்வேத டயட்டில் இருக்கிறேன். பார்லருக்கு செல்வதை நிறுத்திவிட்டேன். கடைசியாக மெனிக்யூர் அல்லது பெடிக்யூர் எப்போது செய்தேன் என்றும் கூட எனக்கு நினைவில் இல்லை. முகத்திற்கு முல்தானி மெட்டி மற்றும் பச்சை பயறு மாவை தான் பயன்படுத்துகிறேன். ஒவ்வொரு நாளும் கடற்கரைக்குச் சென்று புத்துணர்வான காற்றை சுவாசிக்கிறேன். சூரிய உதயத்திற்குள் எழுந்திருக்கிறேன். நான் இன்று மிகவும் மகிழ்ச்சியானவள். ஆம், நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன், ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ளவும், இன்னொன்றை தத்தெடுக்கவும் விரும்புகிறேன்”.

Actress Amala paul அமலா பால்

அடடா கேட்பதற்கே மகிழ்ச்சியாய் இருக்கிறது... அவரைப் பற்றி சொல்லுங்கள்

”நான் அவருடன் ’ஆடை’ ஸ்கிரிப்டைப் பகிர்ந்துக் கொண்டேன். நான் எனக்காக வேலை செய்ய வேண்டுமென அவர் கூறினார். எனது படங்களைப் பார்த்த பிறகு, நான் சரியாக நடிக்கவில்லை எனக் கூறினார் (சிரிக்கிறார்).  எனது முடிவுகளுக்கு உறுதுணையாக இருக்கிறார். நான் இப்போது இருப்பது, அவர் என் மீது வைத்திருக்கும் அன்பினால் தான். அவரது அன்பு என்னைக் குணப்படுத்தியது. அவர் மிகவும் கூலானவர்!”

ஆடை உங்களுக்கு ஈஸியாக இருந்திருக்காதே

”நான் நடிப்பதை நிறுத்தி விடலாம் என்ற மனநிலையில் இருந்தபோது தான் ஆடை படம் வந்தது. போலி-பெண்ணிய ஸ்கிரிப்ட்களை வைத்துக் கொண்டு இயக்குநர்கள் என்னை அணுகினர். ஆனால் எனக்கு அவற்றில் உடன்பாடில்லை. நான் யதார்த்தத்திலிருந்து வெகு தொலைவில் இருந்ததால் காமினியை என்னால் கொண்டு வர முடிந்தது. இன்றைய இளைஞர்களைப் பற்றியும் அவர்கள் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதையும் தெரிந்துக் கொள்ள எனது சக நடிகர்களுடன் வெளியில் செல்லத் தொடங்கினேன். நான் நகரத்தை சுற்றித் திரிந்து பல வருடங்கள் ஆகின்றன. மக்கள் பேசுவதை மால்களில் கவனித்தேன். கூடுதலாக, இந்தக் கதாபாத்திரத்திற்காக  யோகாவை விட்டுவிட வேண்டியிருந்தது.

ponniyin Selvan: Amala Paul அமலா பால்

ரத்ன குமார் எனக்கு 6 பேக் (சிரிக்கிறார்) வேண்டும் என்றார். நான் மெதுவாக ஜிம்மிங் செய்யத் தொடங்கினேன், ஏனெனில் இது ஒரு பைத்தியமான ஆற்றலைக் கொடுக்கும். தமிழ் சினிமாவில், ஒரு கதாநாயகி ஒன்று ’சமத்து பொண்ணு’, அல்லது ’வில்லி’ இப்படியான வகையில் தான் வெளிப்படுத்தப்படுகிறார். இதற்கிடைப்பட்டவள் தான் பெண் என்பது காட்டப்படுவதில்லை. ஆனால் ஆடையில், கிரே நிற ஷேடை என்னால் கொண்டு வர முடிந்தது. அந்தக் கதையில் உண்மை இருந்தது. சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பிரதிபலித்தது. இந்தப் பெண் காமினி  திமிர்பிடித்த, சுயநலமான, கலைநயமிக்கவள். குடித்துவிட்டு தோழர்களுடன் வெளியே செல்பவள். காமினியாக இருப்பது நல்லது. நான் 20 வயதில் அவளைப் போலவே இருந்தேன். (சிரிக்கிறார்)”

ட்ரைலரில் ரம்யாவுக்கு முத்தம் கொடுத்திருந்தீர்களே?

“நாய் வேஷம் போட்டா குரைச்சு தான ஆகணும்? என என் அப்பா சொல்வார். ஒரு ஓவியர் நிர்வாண விஷயங்களை வரைகிறார் என்றால் அது அவருடைய வேலை. அதேபோல், நடிப்பு எனது வேலை. ஒரு பெண்ணை முத்தமிடுவதில் என்ன தவறு? அந்த ஷாட் ஸ்கிரிப்டில் இல்லை, ஆனால் படபிடிப்பில் அப்படி நடந்தது. கதாபாத்திரத்திற்குள் வந்தவுடன், உங்களுக்குள் இருக்கும் நடிகர் உங்களை முழுமையாக எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்”.

சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடிக்கும் போது எப்படி இருந்தது?

Aadai Box Office Collection Day 1 ஆடை படத்தில் அமலா பால்

”இது ஒரு பெரிய ஆபத்து என்பதால் நான் செட்டில் பதட்டமாக இருந்தேன். ஆனால் எனது குழுவினர் மீது எனக்கு இருந்த நம்பிக்கை, அந்த பதட்டத்தை தணித்தது. ஷாட் தொடங்குவதற்கு முன்பு நான் எனது மேலாளரை அழைத்து, எல்லாமே சரியாக செல்கிறதா என உறுதிப் படுத்திக் கொண்டேன். அங்கு மொபைல் போன்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்தியதும் எல்லோரும் உற்சாகமடைந்தனர். 15 டெக்னீஷியன்கள் மட்டுமே அங்கு இருந்தனர், நான் அப்போது 15 கணவர்களுடன் இருக்கும் பஞ்சலியாக உணர்கிறேன் என குழுவினரிடம் சொன்னேன். படப்பிடிப்பு முடிந்ததும், என் உடலுடன் மிகவும் வசதியாக உணர்ந்தேன். சற்று கற்பனை செய்து பாருங்கள்… உலகம் முழுவதும் என் உடலைப் பார்க்கப் போகிறது. அந்தப் படம் எனக்கு நிறைய பலத்தை அளித்தது. நான் என்னால் முடிந்ததைச் செய்தேன். முடிவுகளைப் பற்றி நான் சிந்திக்கக்கூடாது என்று முன்பே தீர்மானித்திருந்தேன்”.

சினிமாவில் உங்களுடைய நண்பர்கள்?

publive-image அமலா பால்

”என் திருமணம் தோல்வியடைந்து, என் கண்களைத் திறந்தது. அதுவரை, போலி நபர்கள் மற்றும் பொய்யர்களைப் பற்றி எனக்குத் தெரியாமல் இருந்தது. நான் கேட்க விரும்பும் விஷயங்களாகப் பார்த்து, அவர்கள் என்னிடம் சொன்னார்கள். நண்பர்கள் என்னைக் காட்டிக் கொடுத்தார்கள், நான் அவர்களை இழந்தேன். பரவாயில்லை, எல்லாமே ஒரு பாடம் தானே” என முதிர்ச்சியுடன் பேசி சிரிக்கிறார் அமலா பால்!

Tamil Cinema Amala Paul

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: