நடிகை அமலா பாலை விட்டு பிரிந்து சென்ற அவரது முன்னாள் காதலர் பவனிந்தர் சிங் தத், அமலா பால் உடனான திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை திருமண விழா புகைப்படங்கள் எனக் கூறி இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியதற்காக அவர் மீது அமலா பால் அவதூறு வழக்குத் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
நடிகை அமலா பாலின் மாஜி காதலர் பவனிந்தர் சிங் தத், அமலா பால் உடனான திருமண நிச்சயதார்த்த படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியதற்காகவும், அவற்றை அவர்களின் திருமண விழா புகைப்படங்கள் எனக் கூறியதற்காகவும் அமலா பால், பவனிந்தர் சிங் தத் மீது அவதூறு வழக்குத் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து நடிகை அமலா பாலின் வழக்கறிஞர் சந்திரபாபு, பவனிந்தர் சிங், ஒரு தொழில்முறை பாடகர், அவருக்கு சென்னை அசோக் நகரில் அலுவலகம் இருந்தாலும், பெரும்பாலும் அவர் புதுச்சேரியில்தான் இருக்கிறார். அதனால், அமலா பால், நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்ய அனுமதி தேவை என்று கோரியதை அடுத்து, நீதிபதி என்.சதிஷ் அனுமதி அளித்தார்.
முன்னணி நடிகையான அமலா பால், பவனிந்தர் சிங் தத் உடன் உறவில் இருந்தார். அவருடன் அமலா பால் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார் என்று அவருடைய வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்குப் பிறகு, பவனிந்தர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படங்களை பதிவேற்றி, அதை அவர்களின் திருமண புகைப்படங்கள் என்று கூறியுள்ளார். இந்த செய்தி நாடு முழுவதும் உள்ள அனைத்து ஊடக நிறுவனங்களாலும், குறிப்பாக சென்னையில் செயல்படும் நிறுவனங்களாலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், நடவடிக்கைக்கான அதிகார எல்லை சென்னை உயர்நீதிமன்றத்தின் எல்லைக்குள் வந்துள்ளது என்றார்.
பாடகர் பவனிந்தர் சிங் இன்னும் சில புகைப்படங்களை வைத்திருப்பதாகவும், அவற்றை சமூக ஊடகங்களில் பதிவேற்றுவதாக அச்சுறுத்துவதாகவும் கூறிய நடிகை அமலா பாலின் வழக்கறிஞ்ர், நடிகை அமலா பால், பவனிந்தருடன் தனிப்பட்டமுறையில் இருந்த நேரங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பொதுவில் பகிர்வதைத் தடுக்கும் நிரந்தரத் தடை உத்தரவை விரும்புவதாகக் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"