அமலா பால் தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தமிழில் குட்டி ஸ்டோரி படத்தில் நடித்த அவருக்கு நெட்ஃபிளிக்ஸில் வெளியான பிட்ட கத்தலு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. மீரா என்று கதாப்பாத்திரத்தில், குடும்பங்களில் நடக்கும் வன்முறையில் இருந்து தப்பித்த ஒருவராக நடித்துள்ளார். திருமணம் என்பதில் நம்பிக்கை கொண்ட நவயுக பெண்ணாக மீராவின் கதாப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த கதையில் மீராவின் கணவர் அவரை பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துகிறார். இருப்பினும் திருமண உறவில் இருந்து வெளியேறக்கூடாது என்ற எண்ணங்களுடம் வாழும் மீரா ஒரு நேரத்தில் அந்த துன்புறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுக்கிறார்.
இந்த கதாப்பாத்திரம் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்பு அவருக்கு ஆதரவு அளிக்க இருக்கும் அமைப்புகள் ஏதும் நிஜ உலகில் இல்லை. நான் என்னுடைய கணவரை பிரிந்த பிறகு ஒருவரும் எனக்கு ஆதரவாக என்னிடம் பேசவில்லை. ஆனால் அனைவரும் என்னிடம் ஒரு பயத்தை விளைவித்தனர். என்ன இருந்தாலும் நீயும் ஒரு பெண் என்று தான் கூறினார்கள்.
ஒரு ஆணின் துணையில்லாமல் இருப்பது கடினம் என்றும் என்னுடைய திரைவாழ்க்கை முடிவுக்கு வரும் என்றும் கூட கூறினார்கள். யாரும் என்னுடைய மனநிலை குறித்து கவலைப்படவில்லை என்று சமீபத்தில் ஒரு நேர்காணலில் அமலா பால் கூறியுள்ளார். தன்னுடைய கணவர் ஏ.எல்.விஜயை பிரிந்த பிறகு, மன அழுத்தம் தருவதற்கான எந்த காரணங்களையும் வெளிப்படுத்தாமல் தன்னுடைய திரை வாழ்க்கையை அமலா பால் தொடர்ந்த போது பல்வேறு கேலிகளுக்கு அவர் ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil