/tamil-ie/media/media_files/uploads/2019/10/a374.jpg)
amalapaul viral video
Amala Paul : சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்களில் நடிகை அமலா பாலும் ஒருவர். அண்மையில் பாடகர், பவ்னிந்தர் சிங்கை அவர், திருமணம் செய்து கொண்டாரா இல்லையா என அவரது ரசிகர்கள் மண்டையை பிய்த்துக் கொள்கிறார்கள். தற்போது அமலா, தனது தாயுடன் கேரளாவில் உள்ள அவரது வீட்டில் கொரோனா வைரஸ் லாக் டவுன் நேரத்தை செலவிட்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு காலமான தனது அப்பாவுக்கு, சில நாட்களுக்கு முன்பு, அன்பான அஞ்சலி குறிப்பொன்றையும் எழுதியிருந்தார்.
இந்நிலையில் அமலா பால் ஒரு புதிய வீடியோவை இன்ஸ்ண்டாகிராமில் வெளியிட்டுள்ளார், அதில் மழை தூறத் தொடங்கியதும், மரத்தில் இருக்கும் மாங்காய்களை முத்தமிடுகிறார். பின்னர் வெள்ளை சியாமிஸ் பூனையை தூக்கிக் கொண்டு, அங்கும் இங்கும் ஓடி, மரத்தில் இருக்கும் மாங்காய்களுக்கு முத்தம் தருகிறார். பின்னர் கறுப்பு, வெள்ளை என தலா ஒவ்வொரு நாய் ஃப்ரேமில் சேர்ந்துக் கொள்கிறது. மகள் சந்தோஷப் படுவதைப் பார்த்த, அமலா பாலின் அம்மா, பெருமழை வந்தால் எப்படி இருக்கும் என்கிறார்.
வீடியோவை பதிவேற்றிய அமலா, "எல்லாமே முதலில் சிறப்பு வாய்ந்தவை. லாக் டவுனில் முதல் மழை. எங்கள் லிட்டில் பேபி மூனின் முதல் மழை. 2020-இன் முதல் மாம்பழங்கள். மழை பிரபஞ்சத்தின் மகிழ்ச்சியான அறிகுறி. வீடியோ மற்றும் உரையாடல்கள்: அம்மா " என்று தெரிவித்திருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.