லீனா மணிமேகலைக்கு ஆதரவாக இயக்குநர் சுசி கணேசன் மீது புகார் கூறியதற்கு தமக்கு போன் போட்டு திட்டியதாக அமலா பால் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் சுசி கணேசன் 13 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இயக்குனர் லீனா மணிமேகலை தெரிவித்தார். அவருக்கு நடிகை அமலா பால் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் சுசி கணேசன் தனக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக அமலா கூறினார்.
சுசி கணேசன் மீது அமலா பால் புகார்
இந்த புகார் சில நேரத்திலேயே வைரலானது. இதனை பார்த்த சுசி கணேசன், அமலாவுக்கு போன் போட்டு திட்டியுள்ளதாக கூறியுள்ளார். இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், “இயக்குநர் விக்னேஷ் மற்றும் அவரது மனைவி மஞ்சரி எனக்கு போன் செய்தார்கள். நான் லீனாவுக்கு ஆதரவு தெரிவித்தது குறித்து விளக்கம் அளிக்க முயற்சி செய்தேன். அவர்கள் சமாதானம் செய்வதற்குள், சுசி கணேசன் என்னை அசிங்கமாக திட்டத் தொடங்கி விட்டார். அதை கேட்டு அருகில் இருந்த அவர் மனைவி சிரிக்கிறார். ஆனால் இது போன்று பேசுவதன் மூலம் என்னை நிறுத்திவிடலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.” என்று எழுதியிருந்தார்.
October 2018
முதலில் அமலா அளித்திருந்த புகார் அதிக அளவில் வைரலாகியுள்ள நிலையில், தற்போது லீனாவுக்கு அடுத்ததாக அமலா பாலும் சுசி மீது புகார் அளித்துள்ளார்.