Advertisment
Presenting Partner
Desktop GIF

காதலை உறுதி செய்த அமலாபால்... விரைவில் திருமணம் : முத்த வீடியோ வைரல்

நடிகை அமலா பாலுக்கு ஜகத் தேசாய் ஒரு ரிசார்ட்டில் நடனம் ஆடிய பிறகு தனது லவ் ப்ரபோஸ் செய்தார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Amala Paul

அமலாபால் ஜெகத் தேசாய்

நடிகை அமலா பால் இன்று தனது 32-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு வாழ்த்து சொல்லும் விதமாக தான் ப்ரபோஸ் செய்த வீடியோவை பகிர்ந்துள்ள அவரது காதலன் ஜெகத் தேசாய் பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

Advertisment

வீர சேகரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அமலா பால் தொடர்ந்து சிந்து சமவெளி என்ற சர்ச்சை படத்தில் நடித்திருந்தார். இந்த இரு படங்களுமே அவருக்கு கை கொடுக்காத நிலையில், பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படம் அமலா பால்க்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. விதார்த் நாயகனாக நடித்த இந்த படம் தமிழில் பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்த அமலா பால் தமிழில் கடைசியாக, கடாவர் என்ற படத்தை தயாரித்து நடித்திருந்தார். தற்போது மலையாள படங்களில் கவனம் செலுத்தி வரும் அமலா பால், விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அவரது காதலரான ஜெகத் தேசாய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அமலா பால் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து சொல்லும் வகையில் தான் ப்ரபோஸ் செய்த வீடியோ பதிவை வெளியிட்டுள்ள ஜெகத் தேசாய், பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்து திருமண மணிகள் என்ற ஹேஷ்டெக்குடன் பதிவிட்டுள்ளார். ஜெகத்தின் ப்ரபோஸ்ஸை ஏற்றுக்கொண்ட அமலாபால் அவருக்கு முத்தம் கொடுப்பதும் வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

https://www.instagram.com/reel/Cy2ZeoxB_Yl/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==

இயக்குனர் ஏ.எல் விஜயை காதலித்து கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட அமலா பால் அடுத்த ஒரு வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்திருந்தார். அதன்பிறகு 2020-ம் ஆண்டு மும்பையை சேர்ந்த பாடகர் பாவ்னிந்தர் சிங்குடன் அமலாபால் லிவ் இன் ரிலேஷன் ஷிப்பில் இருந்ததாக தகவல் வெளியானது. அதன்பிறகு இருவரும் திருமண உடையில் இருந்த புகைப்படங்கள் வெளியானதால், அமலாபால் 2-வது திருமணம் செய்துகொண்டதாக கூறப்பட்டது.

ஆனால் இந்த தகவலை மறுத்த அமலாபால், இது வெறும் போட்டோஷூட் தான் என்று விளக்கம் அளித்திருந்தார். இதனிடையே தற்போது ஜெகத் தேசாயுடன் காதலில் இருப்பதை உறுதி செய்த அமலாபால் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ள நிலையில், இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் அமலாபால்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்களுடன் விரைவில் திருமண தேதியை அறிவிக்குமாறு கேட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Amala Paul
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment