scorecardresearch

பாஞ்சாலிக்கு 5 கணவர்கள் ; படத்தில் 15 கணவர்கள் இருந்தார்கள் – ஆடை படவிழாவில் அமலாபால் அதிர்ச்சி தகவல்

படம் ஓடலைன்னா என்ன பண்ணுவீர்கள்? நீங்கள் அவ்வளவுதான், இதுபோன்ற கமெண்ட்களை பார்த்தேன். எனக்கென்ன கவலை, இதுதான் அவர்களுக்கு நான் சொல்லும் பதில்

aadai tamil movie download, aadai movie story, aadai imdb, aadai tamil movie, ஆடை திரைப்படம்

ஆடை படத்தில் தனக்கு 15 கணவர்கள் இருந்தார்கள் என்று நடிகை அமலா பால் கூறினார்.

‘மேயாதமான்’ ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்துள்ள படம் ஆடை. பர்ஸ்ட் லுக், டீசர் வெளியானநிலையில், படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற விழாவில் ஆடை படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியிடப்பட்டது. அமலா பால், பார்த்திபன், அருண்பாண்டியன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய அமலா பால், ஆடை திரைப்படம் தனது சினிமா வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தும் என்றார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது,இசை வெளியீட்டு விழா வரைக்கும் இந்த படம் வந்திருப்பது சந்தோஷமான விஷயம். எனக்கு வரும் கதைகள் முழுவதும் பொய்யாக இருந்தது. அதனால் சினிமாவைவிட்டு விலக முடிவு செய்திருந்தேன். அந்த நேரத்தில் தான் ஆடை கதை வந்தது. உடனே இயக்குனரை சந்தித்து கதை கேட்டேன். பிறகு இது ஏதும் இங்கிலிஷ் பட ரீமேக் இல்லையே எனக் கேட்டேன். இல்லை இது ஒரிஜினல் தான் என ரத்னகுமார் கூறினார். இந்த படம் ஆரம்பித்ததில் இருந்தே பாசிட்டிவ்வாக இருந்தது. இந்த படத்தில் நம்பிக்கை தான் முக்கியம். படக்குழு மீது முழு நம்பிக்கை வைத்தேன். அதன் பிறகு தான் படப்பிடிப்புக்கு சென்றோம்.
மேயாதமான் படத்திற்கு முன்பு ரத்னகுமார் எழுதிய கதை ஆடை. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக அவர் மேயாதமான் எடுத்தார். இந்த படம் எனக்கு ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும். இந்த படத்துக்காக எந்த ஒப்பந்தமும் போடவில்லை. டிரெய்லர் வந்ததுக்கு அப்புறம் நிறைய பேர் ஏமாந்திருப்பாங்க. ஏனென்றால் படத்தில் ஆடையே இருக்காது என நினைத்திருப்பார்கள். டிரெய்லரை பார்த்த பிறகு இத்தனை காஷ்டியூமா என ஏமாந்து போயிருப்பார்கள்.

இரண்டாம் பாதியில் உள்ள ஆடையில்லா காட்சிகளை படமாக்கும் முன்பு, கேரவனில் பயத்துடன் இருந்தேன். அப்போது மேனேஜரை அழைத்து செட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று கேட்டேன். முக்கியமான 15 பேரை தவிர மற்ற அனைவரையும் அனுப்பிவிட்டதாக கூறினார்கள். முதல் காட்சியை படமாக்கிய பின், இயக்குனரிடம், பாஞ்சாலிக்கு 5 கணவர்கள் இருந்தார்கள். இங்கு 15 கணவர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னேன். அந்த அளவுக்கு இந்த டீமின் மீது நம்பிக்கை வைத்திருந்தேன். அந்த நம்பிக்கை இல்லாமல் இருந்திருந்தால், இந்த படத்தை நான் கண்டிப்பாக பண்ணியிருக்க மாட்டேன்.

இந்த படம் ஓடலைன்னா என்ன பண்ணுவீர்கள்? நீங்கள் அவ்வளவுதான், இதுபோன்ற கமெண்ட்களை பார்த்தேன். எனக்கென்ன கவலை, இதுதான் அவர்களுக்கு நான் சொல்லும் பதில், இது ஒரு நேர்மையான படம், உண்மையான படம். இந்த படத்தின் மூலம் கிடைத்த அனுபவங்கள் மிகவும் வலுவானது என்று அமலாபால் பேசினார்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Amalapaul aadai movie experience