அமலாபால்க்கு என்று ஒரு தனி அடையாளம் இருக்கிறது. எதைப் பற்றியும் கவலைப்படாமல், யார் என்ன சொல்வார்கள் என்பது பற்றியெல்லாம் யோசிக்காமல், தன் மனதுக்கு சரியென்று படுவதை பட்டென்று செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
ஊருக்கு ஒதுக்குபுறமாய் ஓட வேண்டிய அந்த மாதிரி படமாகிய 'சிந்து சமவெளி'யில் நடித்தது அவரது சொந்த விருப்பத்தின் நடந்ததோ என்னவோ, ஆனால், அதன் பிறகு தனது விடா முயற்சியாலும், திறமையான நடிப்பாலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையா உயர்ந்தது எல்லாம் அவரது சொந்த முயற்சி. அவரது உழைப்பு.
விஜய்க்கே ஜோடியாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்தவர், அதன்பிறகு காதல் கணவர் ஏஎல் விஜய்யை திருமணம் செய்த பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கினார் (?). ஆனால், அவரை சில ஆண்டுகளிலேயே விவாகரத்து செய்து, மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.
செலக்டிவாக கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அமலா, விவாகரத்துக்கு பிறகு வழக்கம் போல சமூகத்தில் அதிக விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.
கவர்ச்சியாக ஒரு புகைப்படம் வெளியிட்டால் கூட, அவரது விவாகரத்தை மையப்படுத்தி அருவருக்கத்தக்க வகையிலேயே விமர்சிக்கப்பட்டு வருகிறார். அதிலும், ஆடை படத்தில் அவரது நிர்வாண நடிப்பு அவரது துணிச்சலுக்கு ஒரு அடையாளம் என்றாலும், அவர் எதிர்கொண்ட விமர்சனம் எக்கச்சக்கம்.
எனினும், வழக்கம் போல் இதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாத அமலா, தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் சமூக தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
data-instgrm-version="12">
data-instgrm-version="12">
data-instgrm-version="12">
இந்தோனிசியாவில் விடுமுறையைக் கொண்டாடும் அமலாபால் அங்கு எடுத்த புகைப்படங்களை தான் இன்ஸ்டா =வில் வெளியிட்டுள்ளார்.