தீபாவளியன்று சிவகார்த்திக்கேயன், சாயப்பல்லவி நடிப்பில் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா,மும்பை போன்ற வெளி மாநிலங்களிலும் படம் சாதனை படைத்துள்ளது.
முதல் இரண்டு நாட்களில் உள்நாட்டில் ரூ.40.5 கோடி வசூலித்த அமரன் திரைப்படம் மூன்றாவது நாளில் படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்ததாக வர்த்தக இணையதளமான சாக்னில்க் கூறுகிறது.
ஆங்கிலத்தில் படிக்க
Amaran box office collection Day 3: Sivakarthikeyan’s Major Mukund Varadarajan biopic holds strong, beats lifetime collection of Ayalaan
உலகளவில் சுமார் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 'அமரன்' திரைப்படம் வெளியான நிலையில் படம் பல்வேறு பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளது. ராணுவ வீரரின் வாழ்க்கை கதையை படமாகக் கொண்டுள்ளதால் இப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
படம் வெளியானபோது தொடர்ந்து 4 நாட்கள் பொது விடுமுறை என்பதால் நல்ல வசூலை பெற்றுள்ளது. இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவிலேயே அதிக வசூல் ஆகியிருந்தது.
திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அமரன் படம் மூன்று நாட்களில் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
முதல் நாளில் உலக அளவில் ரூ.42.3 கோடி வசூலை எட்டியிருந்த நிலையில், இப்படம் ரூ.100 கோடி வசூல் செய்யும் என படக்குழுவினரால் எதிர்பார்க்கப்படுகிறது.
விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் பாராட்டைப் பெற்ற இப்படம், தீபாவளியன்று வெளியாகி அமோக வெற்றியைப் பெற்றுள்ளது.
அமரன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 3:
அமரன் 3 ஆவது நாளாக தமிழ்நாட்டில் மட்டும் சனிக்கிழமையன்று 21.75 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. தெலுங்கில் சனிக்கிழமையன்று 65.35% ஆக்கிரமிப்புடன் ரூ. 3 கோடிக்கு மேல் வியாபாரம் செய்ததாக கூறப்படுகிறது.