சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான அமரன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும்" என்ற கருத்துக்கு போஸ்டர் பாய் தேவை என்றால், அதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் வலுவான பொருத்தமாக இருப்பார். பல வருட கடின முயற்சிகளுக்குப் பிறகு, ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய அமரன் மூலம் தனது சினிமா வாழ்க்கையின் மிகப்பெரிய ஓப்பனிங்கை பெற்றுள்ளார் சிவகார்த்திகேயன். அமரன் படம், தனுஷின் ராயன் படத்தை விட அதிகமான முதல் நாள் வசூலைப் பதிவுசெய்தது.
2024 ஆம் ஆண்டில் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் அமரன் படம் 4-வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியில் போல் புலையா 3 மற்றும் சிங்கம் அகெய்ன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் போட்டிக்கு இருந்தாலும், அமரன் படம் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி, நடிப்பில் வெளியான அமரன் இந்த ஆண்டு ஒரு தமிழ் திரைப்படத்திற்கான வலுவான முதல் நாள் வசூலில் ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க் படி, வெளியான நாளில், அமரன் ரூ.21.65 கோடி இந்திய நிகர வசூலை ஈட்டியது. தமிழ் பதிப்பு ரூ.17 கோடியும், தெலுங்கு 40 லட்சம், இந்தி 15 லட்சம், கன்னடம் 2 லட்சம், மலையாளம் 1 லட்சம் வசூலித்துள்ளது. தனுஷின் ராயன் படம் முதல் நாளில் இந்தியாவில் ரூ 13.65 கோடியை பதிவு செய்திருந்தது. இறுதியில் அதன் திரையரங்குகளின் முடிவில் உலகம் முழுவதும் ரூ 154 கோடி வசூலித்தது.
தற்போது எல்லாத் திசைகளிலிருந்தும் பாசிட்டிவ் விமர்சனங்கள் வருவதால், அமரன் அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த முதல் ஐந்து தமிழ்ப் படங்களில் இடம்பிடித்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், அதன் முதல் நாள் எண்ணிக்கை கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படத்தில் வசூலை நெருங்கியுள்ளது. இந்தியன் 2 முதல் நாளில் ரூ 25.6 கோடி வசூலித்து முதல் நாள் அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
அமரன் படம் முதல் நாளில் தமிழ்நாட்டின் திரையரங்குகளில் ஒட்டுமொத்தமாக 77.94 சதவீத இடத்தைப் பெற்றுள்ளது. காலைக்காட்சிகள் 63.63 சதவீத ஆக்கிரமிப்புடன் தொடங்கி, மதியம் 81.74 சதவீதமாகவும், மாலையில் 82.36 சதவீதமாகவும், மாலையில் 84.01 சதவீதமாகவும் உயர்ந்தது. இத்திரைப்படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை மற்றும் அவரது அர்பணிப்பை சுற்றி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அவருக்கு மரணத்திற்குப் பின் அவருக்கு அசோக சக்கரம் வழங்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியானில் 2014ல் தீவிரவாதிகளுடன் நடந்த என்கவுண்டரில் முகுந்த் உயிரிழந்தார்.
ஷிவ் அரூர் மற்றும் ராகுல் சிங் எழுதிய இந்தியன் மோஸ்ட் .பியர்லெஸ் ட்ரூ ஸ்டோரீஸ் ஆப் மாடர்ன் மிலிட்டரி (India's Most Fearless: True Stories of Modern Military) என்ற புத்தகத் தொடரிலிருந்து தழுவி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் ஃபிலிம்ஸ் இந்தியா இணைந்து தயாரித்துள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில், அவினாஷ் ராமச்சந்திரன் தனது விமர்சனத்தில், "சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் அற்புதமான நடிப்புடன், மேஜர் முகுந்த் வரதராஜனின் இந்தியா மற்றும் அவரது மனைவி இந்து மீதான காதல் பற்றிய ஒரு அழுத்தமான மற்றும் சக்திவாய்ந்த கதை" என்று எழுதினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.