Advertisment
Presenting Partner
Desktop GIF

அமரன் 4வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்த சிவகார்த்திகேயன் படம்; 10 அம்சங்கள்

Amaran box office collection Day 4: அமரன் படம் வெளியான மூன்றே நாட்களில் உலக அளவில் ரூ. 100 கோடி வசூலித்த தமிழ் நட்சத்திர நடிகர்களின் கிளப்பில் சிவகார்த்திகேயன் இணைகிறார். இந்தப் பட்டியலில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார் போன்ற நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Amaran SK

அமரன் படம் வெளியான மூன்றே நாட்களில் உலக அளவில் ரூ. 100 கோடி வசூலித்த தமிழ் நட்சத்திர நடிகர்களின் கிளப்பில் சிவகார்த்திகேயன் இணைகிறார்.

Amaran box office collection Day 4: அமரன் படம் வெளியான மூன்றே நாட்களில் உலக அளவில் ரூ. 100 கோடி வசூலித்த தமிழ் நட்சத்திர நடிகர்களின் கிளப்பில் சிவகார்த்திகேயன் இணைகிறார். இந்தப் பட்டியலில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார் போன்ற நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Amaran box office collection Day 4: Sivakarthikeyan film enters Rs 100 cr club; features in global top 10

இந்த தீபாவளிக்கு அமரன் படம் தான் பெரிய ரிலீஸ் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதற்கு கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் ஆதரவு இருந்தது. இந்த படம் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு. இதில் சாய் பல்லவி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் மேலும், இந்த வகை படங்களுக்கு தேவையான சரியான விதமான ஹைப் இருந்தது. அமரன் படம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. 

அமரன் திரைப்படத்தை ரசிகர்கள், பார்வையாளர்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர். தீபாவளிக்கு ரிலீஸ் ஆன பெரிய பட்ஜெட் படமான அமரன் திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸ் வசுலீல் உலக அளவில் ரூ.100 கோடி வசூலித்து ரூ. 100 கிளப்பில் இணைந்த சிவகார்த்திகேயனின் மூன்றாவது திரைப்படம் என்ற சாதனையை உருவாக்கியது. மேலும், அவரது முந்தைய படங்களான டாக்டர் மற்றும் டான் படங்களுக்கு மாறாக 3 நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்து அமரசன் சாதனை படைத்தது.

அமரன் பாக்ஸ் ஆபிசில் தொடர்ந்து வெற்றி நடைபோட்டு வருகிறது. அமரன் படம் 4-வது நாளில் 21.75 கோடியை வசூலித்தது. இது தொடக்க நாளிலும் 3-ம் நாளிலும் வசூலித்த அதே எண்ணிக்கையாகும். அமரன் படங்களிலிருந்து எதிர்கொள்ளும் போட்டியை கருத்தில் கொண்டு இந்த நிலைத்தன்மை பாராட்டத்தக்கது. ஜெயம் ரவியின் பிரதர், கவின் நடித்த பிளடி பிச்சைக்காரன், மற்றும் பூல் புலய்யா 3 மற்றும் சிங்கம் அகெய்ன் போன்ற ஹிந்தி படங்கள் படங்களும் வெளியகி உள்ளன. முதல் நாள் மற்றும் 3வது நாளில் ரூ. 21.4 கோடி வசூலித்த பிறகு, 2-ம் நாளில் ரூ. 19.15 கோடியுடன் சிறிது சரிவைச் சந்தித்த பிறகு, நான்காவது நாள் தொடக்க வார இறுதியில் படத்தின் உள்நாட்டு வசூல் ரூ.83.45 கோடியாக உள்ளது.

சுவாரஸ்யமாக, காம்ஸ்கோரின் கூற்றுப்படி, அமரன் உலக அளவில் 7வது இடத்தைப் பிடித்தது. மேலும், 3வது மற்றும் 4வது இடத்தில் இருக்கும் சிங்கம் அகைன் மற்றும் பூல் புலய்யா 3 படங்கள் இருக்கின்றன. 

அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. மேலும், இந்த படம் வெளியான மூன்றே நாட்களில் உலக அளவில் ரூ. 100 கோடி வசூலித்த தமிழ் நட்சத்திரங்களின் டாப் குழுவில் சிவகார்த்திகேயன் இணைந்ததால் சினிமா வர்த்தகத்தை கணிப்பவர்கள், அவரை டாப் நட்சத்திரமாக நிலைநிறுத்துகின்றனர். இந்தப் பட்டியலில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார் போன்ற நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அமரனின் இந்த ஓட்டத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் தெலுங்கு பதிப்பின் செயல்திறன் ஆகும்/ இது கிட்டத்தட்ட 17 சதவீத வசூலை ஈட்டியது. தமிழ்ப் பதிப்புக்கான முக்கியமான மையங்களில் 4ஆம் நாள் 84.61 % இடங்களையும், தெலுங்குப் பதிப்பிற்கு 76.34 % இடங்களையும் பெற்றது. சாய் பல்லவி, கமல்ஹாசன் மற்றும் சிவகார்த்திகேயன் உட்பட இந்த படத்தில் இணைந்திருப்பது படத்தின் பிரபலத்திற்குச் சான்றாகும்.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை மற்றும் சி.எச். சாய் ஒளிப்பதிவில், அமரன் திரைப்படம் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கிய இரண்டாவது படம் ஆகும். மேலும் இது சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்கையில் முதல் முயற்சியைக் குறிக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sivakarthikeyan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment