தீபாவளியன்று சிவகார்த்திகேயன் சாய்பல்லவி நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் வசூலில் அதிரடி காட்டி வரும் நிலையில் ஓடிடி ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அமரன் திரையரங்குகளில் இன்னும் சில நாட்கள் ஓடும் என்றாலும் ஓடிடிக்கு எப்பொழுது வரும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது.
அமரன் திரைப்படத்தை ராஜ்கமல் ப்ரொடக்ஷன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். உண்மையான இராணுவ வீரரின் கதை என்பதால் ஆரம்பத்தில் இருந்தே படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வந்துள்ளது. அதற்கு ஏற்றார்போல படமும் உலக அளவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வாரவேற்பை பெற்று அதிக வசூலை ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
தீபாவளியன்று வெளியான அமரன் திரைப்படம் நாடு முழுவதும் சுமார் 1000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான நிலையில் முதல் நான்கு நாட்களிலேயே சுமார் 150 கோடி ரூபாய் வசூலை எட்டியது. தமிழகத்தில் மட்டும் இதுவரை சுமார் 80 கோடி வசூலையும் இந்தியாவில் 5 நாட்களில் 93.35 கோடியும், உலகளவில் சுமார் 140 கோடியை எட்டிவிட்டதாக படக்குழுவினர் தெரவித்தனர்.
அமரன் திரைப்படம் குறித்து அரசியல் கட்சியினர், திரை பிரபலங்கள் என அனைவருமே நல்ல கருத்துக்களை சொல்லி வருவது, படத்தை பார்க்காதவர்களுக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தி உள்ளது. திரையரங்குகளில் வெளியான சில நாட்களிலேயே மக்கள் அனைவரும் எளிமையாக படத்தை அடிக்கடி பார்க்கும் விதமாக ஓடிடியிலும் வெளியாகிறது. எனவே அமரன் படமும் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது.
அதற்கு ஏற்றார்போல அமரன் திரைப்படமும் எந்த ஓடிடி தளத்தில், எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அமரன் ஓடிடி ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
அமரன் படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் டிசம்பர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் இப்படம் ஓடிடியில் வெளியாகும் அதிகாரப்பூர்வ தேதியினை விரைவில் நெட்ஃப்ளிக்ஸ் தளம் வெளியிட உள்ளாதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“