scorecardresearch

அண்ணாத்த அப்டேட் கேட்ட ரசிகர் : அமேசான் சொன்ன பதில்

Rajinikanth Annaatthe Update: அண்ணாத்த படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் ட்விட் செய்துள்ளதற்கு அமேசான் பதில் அளித்துள்ளது.

அண்ணாத்த அப்டேட் கேட்ட ரசிகர் : அமேசான் சொன்ன பதில்

Annaatthe Update: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் தொடங்கியிருக்கிறது. ஓட்டு போட்ட கையோடு ஐதராபாத் பறந்த ரஜினி அண்ணாத்த ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார்.

வலிமை அப்டேட் கேட்டு அஜித்தையே அறிக்கை விடவைத்த தல ரசிகர்கள் ஸ்டைலில் இப்போது ரஜினி ரசிகர்களுக்கும் அண்ணாத்த அப்டேட் கேட்கும் டிரெண்டை தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் நேற்று டிவிட்டரை திணரடித்த ரஜினி ரசிகர்கள், அண்ணாத்த அப்டேட் கேட்டு பல நடிகர்களையும் ,சன் பிக்சர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களையும் டேக் செய்து அமர்க்களம் செய்தனர். எங்குமே அப்டேட் கிடைக்காத விரக்தியில் ரஜினி ரசிகர் ஒருவர் அமேசான் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை டிவிட்டர் கணக்கை டேக் செய்து அண்ணாத்த அப்டேட் கேட்டார். மனம் தளராமல் முயற்சி செய்த அந்த ரஜினி வெறியருக்கு அமேசான் ஊழியர் ஒருவர் பதிலளித்தது அவரை குஷிப்படுத்தியது.

ஆனால் அந்த பதிலில் இது தொடர்பாக நாங்கள் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை ,அப்டேட் தெரிந்து கொள்ள எங்கள் இணையதளத்தை பாருங்கள் என்று சொன்னதால் அப்டேட் கேட்டவர் அப்செட் ஆகிபோனார்.

இந்நிலையில் சிறுத்தை சிவா ரஜினிகாந்த் இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படத்தை ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்ந்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Amazon has responded to fans tweets asking for an update on annathas film