/indian-express-tamil/media/media_files/KTlu9dMYVwuEu7292fHc.jpg)
அம்பிகா (புகைப்படம்: இன்ஸ்டாகிராம்)
காக்கிச் சட்டை படத்தில் கமலுடன் குறிப்பிட்ட ஸ்டெப் போட முடியாமல் தவித்து, டான்ஸ் மாஸ்டரிடம் ஐஸ் வைத்து எஸ்கேப் ஆன கதையை நடிகை அம்பிகா பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
கமல்ஹாசன், அம்பிகா நடிப்பில் வெளிவந்து சக்கப்போடு போட்ட படம் காக்கிச் சட்டை. நடிகர் சத்யராஜின் பேமஸ் டயலாக் ஆன தகடு, தகடு இந்தப் படத்தில் தான் இடம்பெற்றது. இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் செம ஹிட் ஆகின.
இந்த நிலையில், கமலுடன் டான்ஸ் ஆட முடியாமல் தவித்த கதையை நடிகை அம்பிகா தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதில், காக்கிச் சட்டை படத்தில் வானிலே தேனிலா பாடலில், கடைசியில் நானும் கமலும் ஒரு ஸ்டெப் போடுவோம். அதன் பிறகு கமல் மட்டும் தனியாக ஸ்டைலான அந்த கஷ்டமான ஸ்டெப்பை செய்வார். உண்மையில் அந்த ஷாட்டில் நானும் இருந்தேன், அந்த ஸ்டெப்பை நானும் போட வேண்டியிருந்தது. வெளியில் வேற போய்கிட்டு இருந்தது. அப்ப நான் சொன்னேன், இந்த மூவ்மெண்ட்ஸ் நான் பண்றதுக்குள்ள வெயிலும் போயிடும், டைரக்டர்கிட்ட இருந்து தான் வாங்கணும் நினைச்சேன். அப்புறம் மாஸ்டர் கிட்ட போய், நான் சுத்தி அங்கிட்டு போற மாதிரி பண்ணுங்க என ஐஸ் வைத்தேன். அப்படியே அந்த ஷாட் எடுக்கப்பட்டது. கமல் மட்டும் அந்த ஷாட்டை தனியாக பண்ணவில்லை என்றால், அவ்வளவு தான், என்று அம்பிகா கூறியுள்ளார்.
#Ambika #KamalHaasan
Posted by Ambika Gallery on Tuesday, July 18, 2023
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.