வயது வந்தோருக்கான திரைப்பட நட்சத்திரமான சோபியா லியோன் மார்ச் 1 அன்று நியூ மெக்சிகோவில் உள்ள அவரது குடியிருப்பில் மயங்கிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவருக்கு வயது 26.
“சோபியா ஒரு அன்பான மகள், சகோதரி, பேத்தி, மருமகள் மற்றும் தோழி" என்று லியோனின் சித்தி மைக் ரோமெரோ தெரிவித்துள்ளார்.
மேலும், "அவள் எல்லா விலங்குகள் மீதும் ஆழ்ந்த அன்பு கொண்டிருந்தாள். அவளுக்கு 3 செல்லப் பிராணிகள் இருந்தன. அவைகளின்தான் அவளின் உலகம். எப்போதும், தன்னைச் சுற்றியுள்ள அனைவரையும் சிரிக்க வைக்க முயற்சிப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சோபியா லியோன் மரணம் பல்வேறு சந்தேங்களயும் ஏற்படுத்தி உள்ளது. அவரின் மரணம் கொலையாக இருக்கலாம் எனவும் அவரது ரசிகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
மேலும் இது குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மியாமியில் பிறந்த இந்த பார்ன் நட்சத்திரம் 2014 இல் தொழில்துறையில் நுழைந்து 80 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவரின் மரணம் குறித்து மற்றொரு நட்சத்திரம் ஜினா வாலண்டைன், “நான் மனம் உடைந்து பேசாமல் இருக்கிறேன். என்னால் இதனை நம்ப முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“