Advertisment

19 வயதில் நடிகை சுஹானி பட்னாகர் மரணம் : அமீர்கானின் தங்கல் படத்தில் நடித்தவர்

தங்கல் படத்தில் அமீர்கானின் 2-வது மகள், பபிதா குமாரி போகத் என்ற கேரக்டரில் நடித்து குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் தான் சுஹானி பட்னாகர்

author-image
WebDesk
New Update
Suhani Phatnakar

தங்கல் படத்தில் குழந்தை நட்சத்திரம்

அமீர்கானின் பெரிய வெற்றிப்படமான தங்கல் படத்தில் பபிதா குமாரி போகத் என்ற கேரக்டரில் நடித்த நடிகை சுஹானி பட்னாகர் திடீரென மரணமடைந்த நிகழ்வு பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் அமீர்கான் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் தங்கல். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில், மல்யுத்த சாம்பியன் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் ஒருவர் தனது மகள்களை மல்யுத்த போட்டியில் களமிறங்கி வெற்றிபெற செய்வதே கதை. இந்த படத்தில் அமீர்கான் 4 பெண் குழந்தைகளுக்கு அப்பாவாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் அமீர்கானின் 2-வது மகள், பபிதா குமாரி போகத் என்ற கேரக்டரில் நடித்து குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் தான் சுஹானி பட்னாகர். இந்த படத்தின் மூலம் பிரபலமான அவர், ஏராளமாக விளம்பர படங்களில் நடித்து புகழ் பெற்றிருந்தார். இதன் காரணமாக தனது படிப்புக்கு தற்காலிகமாக விடுமுறை எடுத்துக்கொண்ட சுஹானி பட்னாகர் விளம்பர படங்களில் கவனம் செலுத்தி வந்துள்ளார்.

இதனிடையே சமீபத்தில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், இதற்காக, சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இந்த சிகிச்சை காரணமாக பக்க விளைவுகளை சந்தித்த சுஹானி பட்னாகர் சிகிச்சை பலனின்றி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், மரணமடைந்தார். 19 வயதில் நடிகை சுஹானி பட்னாகர் மரணம், பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”

Aamir Khan Bollywood
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment