Serial Actors Unexpected Educational Qualification Tamil News : நாம் தினம் தினம் பார்த்து ரசித்த சின்னத்திரை நட்சத்திரங்கள் பலர், திறமையானவர்கள் மட்டுமல்ல பட்டதாரிகளும்கூட. அதிலும், மருத்துவர், பொறியாளர்கள், முதல் மதிப்பெண்கள் என வெவ்வேறு துறையில் சாதனைப் படைத்தவர்களாக இருக்கின்றனர். அவர்களை பற்றி இங்கே பார்க்கலாம்.
நாயகி தொடர் மூலம் ஆனந்தியாக எல்லோர் மனத்திலும் நிலைத்து இருப்பவர் வித்யா பிரதீப். இவர் அசத்தலான நடிகை மட்டுமல்ல விஞ்ஞானியும்கூட. பயோடெக்னாலஜியில் முதுகலைப் பட்டம் பெற்றது மட்டுமல்லாமல் பிஎச்டியையும் முடித்திருக்கிறார்.

வில்லா டு வில்லேஜ் என்ற ரியாலிட்டி ஷோவின் போட்டியாளர்களின் ஒருவராகப் பங்கேற்றவர் ஷில்ஃபா நிகர். இவர், பி.டி.எஸ் மற்றும் பல் ஒப்பனை மருத்துவர் மற்றும் தலைமை பல் அறுவை சிகிச்சை நிபுணரும்கூட.

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 2 மற்றும் ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸின் செல்ல குரலான ப்ரியங்கா, மெல்லிய குரலுக்குச் சொந்தக்காரர் மட்டுமல்ல, பல் மருத்துவரும்தான். சமீபத்தில் பல் மருத்துவராக தன் கடமையைச் செய்தபடி க்ளிக்கிய பிரியங்காவின் புகைப்படங்கள் வைரலானது.

‘காற்றுக்கென்ன வேலி’ மற்றும் ‘ராஜபார்வை’ உள்ளிட்ட தொடர்களில் பேக் டூ பேக் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் ஆரத்தி ராம்குமார், பெங்களூரு பல்கலைக்கழக கல்லூரியில் எம்பிஏ (நிதி மற்றும் மனிதவள) படித்துள்ளார்.படித்தது மட்டுமல்ல, 2004-ம் ஆண்டில் வகுப்பில் முதலிடம் பிடித்தவரும்கூட.

கட்டமைப்பு பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர் புவியராசு முத்துசாமி. ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி தொடரின் நாயகனான புவி, இனியனாக அறிமுகமாவதற்கு முன்பே, அழகிய தமிழ் மகன் நிகழ்ச்சியிலும், வாணி ராணி தொடரிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாணி ராணி புகழ் அருண்குமார் ராஜன், பி.டெக் பட்டதாரி. பிறகு, எம்பிஏ முடித்தார். இவர் தற்போது, சந்திரலேகாவில் சபரிநாதன் மற்றும் பூவே உனக்காகவில் செல்வம் ஆகிய இரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மா கா பா ஆனந்த் சூப்பர் சிங்கர், அது இது எது, கிங்ஸ் ஆஃப் டான்ஸ், திருமதி சின்னத்திரை மற்றும் கேபிஒய் சாம்பியன்கள் போன்ற பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ளார். சில திரைப்படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். அதுமட்டுமல்ல இவர் எம்பிஏ பட்டதாரியும்கூட.

பாரதி கண்ணம்மா தொடரில் வென்பா கதாபாத்திரம் மூலம் பலரின் கோபத்திற்கு ஆளானவர் ஃபரீனா ஆசாத். நாயகியின் எதிரியாகப் பார்வையிலே சுட்டெரிக்கும் ஃபரீனா எம்பிஏ வரைப் படித்திருக்கிறார்.

நடிகை ஷர்மிளா கோதண்டராமன் எம்.பி.பி.எஸ் முடித்த மருத்துவர் என்பது நம் எல்லோருக்குமே தெரியும். இவர், ‘படிக்காதவன்’ உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களிலும் ‘சந்திரலேகா’, ‘ரோஜா’ உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமித் பார்கவ் தற்போது திருமதி ஹிட்லர் தொடரில் நடித்துக்கொண்டிருக்கிறார். அமித், பி.ஏ. எல்.எல்.பி முடித்த சட்ட பட்டதாரி என்பது பலருக்குத் தெரியாது.

அமித் பார்காவின் மனைவி ஸ்ரீரஞ்சனி சுந்தரம், எலக்ட்ரானிக் மீடியாவில் பி.எஸ்சி முடித்து, தற்போது எம்பிஏ படித்து வருகிறார். மகப்பேறு விடுமுறையில் இருந்த இவர் சமீபத்தில் கலர்ஸ் கிச்சன் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மீண்டும் தன் திரைப்பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார் ஸ்ரீரஞ்சனி.

நீதானே எந்தன் பொன்வசந்தம் தொடரில் அனு கதாபாத்திரத்தில் தர்ஷனா அசோகன் நடிக்கிறார். இவர் பி.டி.எஸ் முடித்த பல் மருத்துவர். இருப்பினும், தன் பல் மருத்து பயிற்சியை மேற்கொண்டு தொடரவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil