Advertisment

அமிதாப் பச்சனுக்கு கை கொடுத்த ஜன்சீர் திரைப்படம்!

புதியவரான அமிதாப் பச்சனை நல்ல நடிகராக நிலை நிறுத்த ஜான்ஜீர் படம் முக்கியப் பங்கு வகித்தது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Happy Birthday Amitabh Bachchan

Amitabh Bachchan

Happy Birthday Amitabh Bachchan: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இன்று தனது 77-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.  வழக்கம் போல், நாடு முழுவதும் அவரின் ரசிகர்கள் இந்நாளை கொண்டாடி வருகிறார்கள். அதோடு ஆயிரக்கணக்கான ரசிகர்கள், அமிதாப் பச்சனின் மும்பை வீட்டின் முன் பூக்கள், பரிசுகள் மற்றும் வாழ்த்துகளுடன் வந்து இறங்கியிருப்பார்கள்.

Advertisment

இந்த வருடம் அமிதாப் பச்சனுக்கு கொஞ்சம் ஸ்பெஷலான ஆண்டு. காரணம், அவர் திரைத்துறைக்கு அறிமுகமாகி 50 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. தனது முதல் படமான கே.ஏ.அப்பாஸின் ’சாத் இந்துஸ்தானி’ படத்தில் புரட்சியாளராக நடித்திருந்தார் பச்சன். கவிஞர் ஹரிவன்ஷ் ராய் பச்சனின் இளைய மகன் தனது முதல் படத்தில் உருது ஷாயராக நடித்தார். அவரது அடுத்த படமான ‘ரேஷ்மா அவுர் ஷேரா’ (1971)-வில் அமிதாப் பச்சனை வாய் பேச முடியாதவராக நடிக்க வைத்திருந்தார் இயக்குநர் சுனில் தத்.

அமிதாப் பச்சனை பல விஷயங்களுக்கு அடையாளமாக சொல்லலாம்.  அவருடைய அற்புதமான, உடனடியாக அடையாளம் காணக்கூடிய குரல். கோலா முதல் நகை விளம்பரம் வரை அனைத்தையும் தனது சிறிய டயலாக்குகளால் மில்லியன் கணக்கான நுகர்வோருக்கு விற்றிருக்கிறது அமிதாப் பச்சனின் குரல்.  ஊமையாக நடித்த அமிதாப் பச்சனுக்கு பிறகு பிரகாஷ் மெஹ்ராவின் சான்ஜீரில் முன்னேற்றம் கிடைக்கிறது. தேவையான இடங்களில் குறைவாக பேசி, தன்னை கூர் தீட்டிக் கொண்டார். இருப்பினும் அந்தப் படத்தில் அமிதாப் பச்சனை விட பிரானுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

புதியவரான அமிதாப் பச்சனை நல்ல நடிகராக நிலை நிறுத்த ஜான்ஜீர் படம் முக்கியப் பங்கு வகித்தது.  ஆனால், இந்தக் கதை அவருக்காக உருவாக்கப் படவில்லை. தர்மேந்திரா தான் இந்தப் படத்தின் தேர்வாக இருந்தார். அந்த நேரம் அவர் பிஸியாக இருந்ததால், தாமதமாகிக் கொண்டிருந்தது. அதனால் அந்த வாய்ப்பு அமிதாப் பச்சனுக்குக் கிடைத்தது.

ஜஞ்சீருக்குப் பிறகு, சொந்த ஊரான அலகாபாத்துக்குத் திரும்பலாம் என பச்சன் நினைத்துக் கொண்டிருந்தார். புதுமுகமாக அறிமுகமாகிய தான் ஏற்கனவே அதிக எண்ணிக்கையிலான தோல்விகளைக் கொடுத்திருப்பதும் அதற்கு முக்கியக் காரணம். போதும் போதும் என்றளவுக்கு கஷ்டங்களை அனுபவித்தார். ஆனால் அந்த நிலை விரைவில் மாறவிருந்தது. சலீம்-ஜாவேத் அமிதாப் பச்சனை பல பிரச்னைகளில் இருந்து விடுவித்தனர். இது அவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. வேறு எவரையும் விட, அதன் வெற்றி அமிதாப்பை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இதை ஆங்கிலத்தில் படிக்க - The making of Amitabh Bachchan: How Zanjeer helped Big B become a star

Amitabh Bachchan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment