இந்திய சினிமாவில் பாலிவுட் படங்களுக்கு உலகளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. அதேபோல் பாலிவுட் நடிகர் நடிகைகளுக்கும் உலகளவில் ரசிகர்கள் இருந்து வருகின்றர். பாலிவுட் படங்கள் இந்தியாவில் வெளியாகும் அதே நாளில், வெளிநாடுகளிலும் பிரம்மாண்டாமாக வெளியாகி வருகிறது.
இதனிடையே பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலர் இருந்தாலும் அமிதாப் பச்சன் ஷாருக்கான் இருவரும் பாலிவுட்டின் அடையாளமாக உள்ளனர். இவர்களை விட பாலிவுட் சினிமாவில் பெரிய ஸ்டார் இருக்க முடியுமா என்ற கேள்வி தற்போது ஓரளவு பதில் கிடைத்துள்ளது என்றே சொல்லாம்.
அமிதாப் பச்சனுக்கு அடுத்து பெரிய ஸ்டார் என்றால் அது ஷாருக்கான் என்று பலரும் செல்ல கேட்டிருப்போம். மொராக்கோவில் நடைபெற்ற மராகேச் சர்வதேச திரைப்பட விழா நடைபெறும் இடத்திற்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் ஒவ்வொரு முறையும், ஒரு அழகான இளம் பெண் ஆஷர் “நமஸ்தே” பாடலைப் பாடிக்கொண்டிருந்தார்.
அவரது பாட்டை இடைநிறுத்தியபோது தெளிவான ஹிந்தியில் பேசினார். அப்போது அவரிடம் எப்படி நன்றாகப் ஹிந்தியில் பேசுகிறாய் என்று தான் இந்தி படங்களின் தீவிர ரசிகை எனறு தெரிவித்துள்ளார். திரைப்படங்களின் தீவிர ரசிகை என்றார். பாலிவுட் நட்சத்திரம் ரன்வீர் சிங், நவம்பர் மாதம் நடைபெற்ற திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ளார்.

அப்போது அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் ஆராவாரத்துடன் செல்ஃபிக்களுக்காக உயர்த்தப்பட்ட கேமராக்களுடன் அதகளம் செய்துள்ளனர். இதனால் விழா முழுவதும் கோலாகலமாக இருந்தது. அனுமதி பெற்ற பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்ட விழா நிகழ்ச்சியில், அமைப்பாளர்களுடன் உரையாடியது மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த மேடையும் கூட ராஹ்-ரா நிகழ்வாக மாறியது. அதை ரன்வீர் சர்வதேச திரைப்பட விழா என்றும் சொல்லியிருக்கலாம்.
இந்த மாதிரியான விழாக்கள் இங்கு நடக்கும் என்று எதிர்பார்க்கலாம் ஆனால் வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் நடந்தது பெரிய ஆச்சரியம்? பிரஞ்சு, அரபு மற்றும் ஸ்பானிஷ் மொழிகள் உலகின் பல இடங்களில் பேசப்படுகின்றன, மேலும் திரைப்பட வசனங்களில் ஆங்கிலம் பெரும்பாலும் காணப்பட வேண்டிய மொழியா? என்று கேட்டால் அதுதான் பாலிவுட்டின் பலம்.
அமிதாப் பச்சன் மற்றும் ஷாருக்கான் இருவரையும் விருந்தினர்களாகக் கொண்ட விழா மட்டுமல்ல அவரது படங்களைப் பார்க்க வந்தவர்களும் ரன்வீர் சிங்கிற்கு விருந்து கொடுத்த கொடுக்கும் அளவுக்கு நடந்துகொண்டதை அங்கே காணலாம். ரன்வீர் சிங்கைச் சுற்றியிருந்த மோகம், ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதியிலும், உலகின் பல பகுதிகளிலும் பாலிவுட் ஆட்சி செய்கிறது என்பதை நிரூபித்துள்ளது.
அப்படியானால், உலக அளவில் மிகப்பெரிய பாலிவுட் நட்சத்திரம் யார் என்ற கேள்வி எழுகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட் சினிமாவை ஆட்சி செய்து வருபவர் அமிதாப் பச்சன். இப்போதும் அவரது படங்கள் பாலிவுட்டின் ஆட்சியை தக்கவைத்தக்கொண்டு வருகிறது. அதேபோல் ஷாருக்கான் உலகின் எந்தப் பகுதியிலும் மிகப்பெரிய கூட்டத்தைக் கூட்டும் அளவுக்கு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பார்.
பெர்லினில் டான் 2 (2011) படத்திற்காக அவர் ஷூட்டிங்கில் இருந்த நேரம் மற்றும் பெர்லினேலில் அவருக்கு இருந்த வரவேற்பு ஜெர்மனியில் அவரது ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்பதை நிரூபித்தது. ஆனால் தற்போது ஜெர்மன் நகரம் ரன்வீர் சிங்கிற்கு இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தை கொடுத்துள்ளது, இதற்கு முக்கிய காரணம் ரன்வீர் சிங்கின் கல்லி பாய் (2019) படம் உலகளவில் வரவேற்பை பெற்றதுதான்.

ஆனால் நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தும் விஷயம் சினிமா, மற்றும் ஷாருக்கானின் கடந்த சில படங்களின் தோல்வியால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பாதிக்கப்படவில்லை என்றாலும், குறைந்தபட்சம் இப்போது வரை, இன்னும் இரண்டு மந்தமான முடிவுகள் இருக்கத்தான் செய்கிறது. ரன்வீர் சிங்கின் ஜெயேஷ்பாய் ஜோர்தார் தோல்வியில் முடிந்தது. (அவரது சமீபத்திய படமான சர்க்கஸ் படமும் தோல்வியடைந்தது). இதனால் அவர் தனது நிலைப்பாட்டை நிலையாக வைத்திருக்க வேகத்தைத் தொடர வேண்டும்.
முன்னணி பெண் நட்சத்திரங்களில், பிரியங்கா சோப்ரா ரசிகர்களின் ஆராவாரத்தை தூண்டும் நட்சத்திரம் இல்லையென்றாலும் கூட உலகளவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வருகிறார். தீபிகா படுகோனேவும் இப்போது அடையாளம் காணக்கூடிய பெயராக இருக்கிறார். பெரிய டிக்கெட் ஜூரிகள் மற்றும் பிரம்மாண்ட வரவேற்புகளை பெற்று வருகிறார். ஆலியா பட்டின் ஹாலிவுட் அறிமுகமான ஹார்ட் ஆஃப் ஸ்டோன், அடுத்த ஆண்டு நெட்ஃபிக்ஸ் இல் வெளியாகும்
ஒரிஜினல் படத்தை உருவாக்குவதில் ஸ்ட்ரீமிங் தளங்களின் நிலையான ஈடுபாடு மற்றும் பல நாடுகளின் வெளியீடு உரிமையை கையகப்படுத்துதல்கள் கிடைக்கச் செய்வது, என நட்சத்திரங்களின் அந்தஸ்தை மேலும் உயர்த்தி வருகிறது. இதனிடையே பாலிவுட் சினிமாவின் பிரபலம் அந்த இடத்திற்கு உரிமை கோரும் புதிய முகம் யார்? அது கார்த்திக் ஆரியனாக இருக்க முடியுமா? அவரது நடிப்பில் வெளியான படங்கள் நவல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் அவருக்கு இன்னும் பயணிக்கக்கூடிய படம் கிடைக்கவில்லை. ஆனால் யாருக்குத் தெரியும்? சினிமாவில் எதுவும் நடக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“