/indian-express-tamil/media/media_files/1VNVtxlfgPEv062jVUrj.jpg)
அமிதாப் பச்சன்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் நகர் அமிதாப் பச்சன் இன்று அதிகாலை மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக அமிதாப் பச்சன் தற்போது படங்களில் முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது 80 வயதை கடந்துள்ள அவர், இன்று (மார்ச் 15) அதிகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் வட்டாரங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தது.
இதனிடையே தற்போது அமிதாப் பச்சனுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டள்ளதாகவும், இது தொடர்பான அதிகாரபூர்வ அறிக்கையை அவரது பி.ஆர் குழு நாளை வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இன்று காலை, தனது சமூகவ வலைப்பதிவில் பதிவு ஒன்றை வெளியிட்ட அமிதாப் பச்சன், "உங்கள் அனைத்து பிரார்த்தனைகளுக்கும் அன்புக்கும் நன்றியுடன், உங்கள் பாசத்தின் கருணைக்கு என்றும் நன்றியுடன், அன்பு மற்றும் நன்றியுடன் எப்போதும் என்று பதிவிட்டுள்ளார்.
T 4950 - in gratitude ever ..
— Amitabh Bachchan (@SrBachchan) March 15, 2024
மேலும் இந்த பதிவில், ஒரு வாரத்திற்கு முன்பு அவர் கலந்துகொண்ட இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்கின் வீடியோவையும் பகிர்ந்துள்ளார். இந்த வார தொடக்கத்தில், அமிதாப் தனது வரவிருக்கும் படங்களில் ஒன்றான நாக் அஸ்வினின் கல்கி 2898 AD படப்பிடிப்பில் பங்கேற்றிருந்தார். இந்த படம் மே 9ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. எனவே இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
T 4950 - Aankh kholke dekh lo, kaan lagake sun lo,
— Amitabh Bachchan (@SrBachchan) March 15, 2024
Majhi Mumbai ki hogi Jai Jaikaar, yeh baat ab maanlo.@ispl_t10
@majhimumbai_ispl#neeti_puneet_agrawal#sachintendulkar#ravishastriofficial#amol_kale76#surajsamat#advocateashishshelar#Street2stadium#NewT10Era… pic.twitter.com/zPUuWgoGXr
2023 இல், அமிதாப் பச்சன் கல்கி 2898 AD படப்பிடிப்பு தளத்தில் காயம் அடைந்தார். மார்ச் 2023 இல், அவருக்கு விலா எலும்பு குருத்தெலும்பு மற்றும் தசைக் கிழிந்ததில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தில் அமிதாப் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.