பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகைகள் தீபிகா படுகோனே மற்றும் கத்ரீனா கைஃப்க்கு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஓபன் சேலன்ஜ் ஒன்றை அறிவித்து, அனைவரையும் அதிர வைத்துள்ளார்.
சினிமா பிரபலங்கள் பலரும் தற்போது ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூவலைத்தளங்களில் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும், அமிதாப்பச்சன், நாகர்ஜூனா போன்ற பிரபலங்கள் ட்விட்டரில் தங்களின் ரசிகர்களுடன் உரையாடுவது, புகைப்படங்களை பதிவிடுவது என தினமும் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில், அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் அவருடைய பயோ டேட்டாவின் முழு விபரத்தையும் பதிவிட்டுள்ளார்.
அத்துடன், நடிகர்கள் அமீர் கான், ஷாஹித் கபூர், நடிகைகள் தீபிகா படுகோனே, கத்ரீனா கைஃப் குறித்து பத்திரிக்கையில் வெளியான செய்தி ஒன்றையும் ஃபோட்டோவாக எடுத்து பதிவிட்டுள்ளார். இந்த செய்தியில், நடிகைகள் தீபிகா படுகோனே மற்றும் கத்ரீனா கைஃப் ஆகிய இருவரும் நடிகர்கள் அமீர் கான் மற்றும் ஷாஹித் கபூர் ஆகியோருடன் இணைந்து நடித்த போது, உயரம் தொடர்பான பிரச்சனைகள் எற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
,
எனவே, இந்த காரணத்தை சுட்டிக் காட்டி ஆமிதாப், தனது பெயர், தொழில், உயரம், எடை உட்பட அனைத்து விபரங்களையும் குறிப்பிட்டு என்னுடன் நடித்தால் உயரம் தொடர்பாப பிரச்சனைகள் ஏற்படாது என்று நையாண்டியாக குறிப்பிட்டுள்ளார். அமிதாப்பின் இந்த கிண்டல் ட்விட் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு நடிகை தீபிகாவுடன் அமிதாப் ’பிகு’ என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால், அதில் தீபிகாவின் அப்பாவாக அமிதாப் நடித்தார். அதன் பின்பு, அவருடன் நடிக்க சந்தர்பம் ஏற்படவில்லை. இந்நிலையில், இந்த ட்விட் மூலம் மீண்டும் ஒரு அப்ளிகேஷனை போட்டுள்ளார் அமிதாப். நடிகை கத்ரீனா கைஃப்வுடன் அமிதாப் நடித்துள்ள திரைப்படம் கூடிய விரைவில் வெளியாகவுள்ளது.