/tamil-ie/media/media_files/uploads/2019/04/D2_W6uZWoAEtSun.jpg)
Amitabh Bachchan - Uyarndha Manidhan
இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கள்வனின் காதலி’.
இதனை இயக்குநர் தமிழ்வாணன் இயக்கியிருந்தார். தற்போது இவர் ’உயர்ந்த மனிதன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். டைட்டிலுக்கு ஏற்றவாறு பாலிவுட்டின் உச்ச நட்சத்திரம் அமிதாப் பச்சன் இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து நடிக்கிறார்.
தமிழ் மற்றும் இந்தியில் இப்படம் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது. இதில் கூடுதலான சிறப்பு என்னவென்றால், 60 வருடமாக இந்திய சினிமாவில் வெற்றி வாகை சூடியிருக்கும் அமிதாப் நடிக்கும் முதல் நேரடி தமிழ் படம் இது தான்.
அமிதாப் பச்சனே கால்ஷீட் கொடுத்திருக்கிறார் என்றால், நிச்சயம் இதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்கிறார்கள் கோலிவுட் ரசிகர்கள்.
Happiest moment of my life ... thank you God , mom, dad for fulfilling a dream which I have never even dreamt of .... ???? toThe evergreen superstar @SrBachchan , sharing it with our super star @rajinikanth & Dir @ARMurugadoss pic.twitter.com/Dwpd2s2nJG
— S J Suryah (@iam_SJSuryah) 31 March 2019
இந்நிலையில், படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட படங்களை ட்விட்டரில் பகிர்ந்து, ”என் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான தருணம் இது. நான் காணாத கனவை நனவாக்கிக் கொடுத்த அம்மா, அப்பா மற்றும் கடவுளுக்கு நன்றி. இந்த மகிழ்ச்சியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுடனும் பகிர்ந்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.
அந்தப் படத்தில் விபூதி பட்டை, குங்கும பொட்டு, கண்ணாடி, வேஷ்டி, குர்தாவுடன் தோளில் சிவப்பு துண்டு ஒன்றையும் போட்டிருக்கிறார் அமிதாப்.
“எனது கனவு நிறைவேறியிருக்கிறது. இதை விட வேறு என்ன எனக்கு மகிழ்ச்சி தரப்போகிறது. நான் இயக்கும் படத்தில் அமிதாப் பச்சன் தமிழுக்கு அறிமுகமாவது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி” என்கிறார் இயக்குநர் தமிழ்வாணன்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.