scorecardresearch

பெங்களூரு பவித்ரா… கேரளா அமல்ஜித்… மாநிலங்களை இணைக்கும் தமிழ் சீரியல் ஜோடி கல்யாணம்

Color’s TV fame Amman serial Amaljith and Pavithra confirm their relationship Tamil News: அம்மன் சீரியல் அமல்ஜித் – பவித்ரா ஜோடி சமீபத்தில் தங்களுடைய காதலை சமூக வலைதளங்கள் வாயிலாக அறிவித்துள்ளனர். அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Amman serial Tamil News: Amaljith-Pavithra Gowda confirm their relationship via insta post

Amman serial Tamil News: கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் முன்னணி சீரியல்களுள் ஒன்றாக ‘அம்மன்’ சீரியல் உள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன் ஒளிபரப்பை தொடக்கி இந்த சீரியல், ரசிகர்கள் மத்தயில் நல்ல வரவேற்பை பெற்ற ஒன்றாக வலம் வருகிறது. இந்த சீரியலில் பவித்ரா கௌடா ஹீரோயினாகவும், அமல்ஜித் ஹீரோவாகவும் நடித்து வருகின்றனர். ஜெனிஃபர், அவினாஷ், சுபா ரக்ஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய ரோலில் நடித்து அசத்தி வருகின்றனர்.

தற்போது புதிய பரிமாற்றதுடன் புதிய நடிகர்களை இணைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் பிரபல சீரியல் நடிகை நிவிஷா மற்றொரு நாயகியாக சமீபத்தில் இணைந்தார். மேலும், பல விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 800 எபிசோடுகளை கடந்து இமாலய சாதனையை நிகழ்த்தியது. இதற்கு சீரியல் குழுவினர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து இருந்தனர்.

இந்த சீரியல் இப்படி சாதனையை நிகழ்த்த முக்கிய காரணம் சீரியலின் ஹீரோ – ஹீரோயின் ஆனா அமல்ஜித் – பவித்ரா ஜோடி என்றால் நிச்சயம் மிகையாகாது. இந்த ஜோடியின் எதார்த்த நடிப்பிற்கு என்று தனிரசிகர்களே உள்ளார்கள். தவிர இந்த ஜோடி நிஜத்திலே காதலர்கள் என்ற விடயம் பலரும் அறிந்திருக்க வாய்ப்ப்பில்லை.

சின்னத்திரை வட்டத்தில் மட்டும் தெரிந்திருந்த இவர்களது காதல் அவ்வப்போது வெளியான பேட்டியின் மூலம் பலருக்கு தெரியவந்தது. இந்த நிலையில் அமல்ஜித் – பவித்ரா ஜோடி சமீபத்தில் தங்களுடைய காதலை சமூக வலைதளங்கள் வாயிலாக அறிவித்துள்ளனர். அமல்ஜித் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘Half’ என கேப்ஷனிட்டு பவித்ராவுடன் தான் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

இந்தப் பதிவிற்கு அவரது ரசிகர்கள் மற்றும் பலர் வாழ்த்துகள் கூறி வருகின்றனர். மேலும், இந்த ஜோடியின் திருமணம் எப்போது? என்றும் கமெண்டில் கேள்வி எழுப்பியுள்ளனர். அதோடு, பெங்களூரைச் சேர்ந்த பவித்ரா கேரளாவின் மருமகளாக ஆக போகிறார் என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Amman serial tamil news amaljith pavithra gowda confirm their relationship via insta post